1
சக்திவாய்ந்த களப் பெயரைத்(domainame) தேர்ந்தெடுப்பதற்கான உதவிக்குறிப்புகள்

ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இணையமுகவரிக்கானURL பெயர், வலைத்தள பெயர் ஆகிய களப்பெயரானது நம்முடைய வணிகத்திற்கான நிரந்தர அடையாளச்சின்னமாக மாறுகின்றது, ஏனெனில் இது வேறு யாராலும் மாற்றப்படக்கூடாததாகும், நம்முடைய பிராண்ட் பெயரை முடிவுசெய்து தெரிவு செய்வதற்காக நாம் மிகவும் கவனமாக ஒருசில முயற்சிகளைச் மேற்கொள்ளவேண்டும் பின்வரும் சக்திவாய்ந்த உதவிக்குறிப்புகள் சரியான டொமைன் பெயரை தீர்மானிக்க உதவுபவைகளாகும்.

1- எப்போதும் நம்முடைய இணையதளத்திற்கு hierarchy. com, bureaucratic. com, orchestrate. com, paradigm. com என்றவாறு உச்சரிக்கவேகடினமான எழுத்துப்பிழைகளை உருவாக்குகின்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் இவ்வாறான பெயரை கூகுளில் தேடும்போது எழுத்துப் பிழைகளுடன் அவ்வலைத்தளத்தை பரிந்துரைக்கும் அதே வேளையில், பார்வையாளர்கள் அவைகளின் பெயரைத் தட்டச்சு செய்யும் போது குழப்பமடைய நேரிடும்

2- அடுத்து letusenjoyeachfriday .com, mostaffordablecarworkshopinsidney.com என்றவாறு மிக நீளமான வலைத்தள பெயர்களை பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்த்திடுக

3- மூன்றாவதாக bestguy .com என்றவாறு நாம்வழங்கும் சேவைக்கும் வலைதளபெயருக்கும் தொடர்பில்லாதவாறு இல்லாமல் வாடிக்கையாளரை கவர்ந்திடுமாறு நம்முடைய சேவைகளுக்கு ஏற்றவாறான பொருத்தமான பெயரைப் பயன்படுத்திடுக

4- நான்காவதாக subconsciousparadigms .com என்றவாறு வலை தளபெயரை நினைவில் கொள்ளவே சிரமபடுவதை தவிர்த்து வலைதள பெயரை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளுமாறு தெரிவுசெய்திடுக

5-ஐந்தாவதாக hungermission.com அல்லது letsfixhunger. comஎன்றவாறு நம்முடைய URL இல் நம்முடைய வலைதளத்தின் பெயரானது அதனுடைய நோக்கம் அல்லது காட்சியைபயன்படுத்தி அதனோடு இணைந்து அர்த்தமுள்ளதாக இருக்குமாறு வைத்திடுக.

6- மற்றவலைதளபெயருக்கு நெருக்கமான பொருந்தக்கூடிய வலைத்தள பெயர்களை முயற்சிக்க வேண்டாம். வேறுஒருவரின் கருத்துகளை நகலெடுப்பதைப் தவிர்ததுதனித்துவமான அடையாளத்தையும் இயற்கையின் உண்மையான ஒரு வலைத்தள பெயரையும் பயன்படுத்துக

7- அற்புதமான வலைத்தள பெயரிடுவதற்காக ஆலோசனைகளை உருவாக்கக்கூடிய இணையதள கருவிகளை பல்வேறு வலைத்தளங்களும் வழங்குகின்றன. அவற்றை பயன்படுத்தி கொள்க

8- இரண்டு சொற்களை இணைத்து பெயரை உருவாக்கிடும்போது கவனமாக உருவாக்கிடுக ஒரு சில நேரங்களில் இரண்டு சொற்கள் இணைந்தால் ஒரு தவறான அர்த்தமுடைய மிகமோசமான சொற்களை உருவாக்கும் என்ற செய்தியை மனதில் கொள்க

Leave a comment