1
நம்முடைய வாழ்நாளில் கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டிய மீ்ச்சிறு லினக்ஸ் இயக்கமுறைமைகள்

தினசரி நாம் எதை பயன்படுத்தி கொள்வது எதனை விடுவது என்றவாறு ஏராளமான லினக்ஸ் இயக்கமுறைமைகள் நாம் பயன்படுத்தி கொள்வதற்காக காத்திருக்கின்றன .அதிலும் சக்திவாய்ந்த பல்வேறு புதுமையான செயல்களை வழங்குகின்ற பல்வேறு மீச்சிறு லினக்ஸ் இயக்கமுறைமைகளும் அவ்வாறே நமக்கு சேவைசெய்திட தயாராக இருக்கின்றன. இவைகளின் ஒரு முழு இயக்க முறைமையும் வெறும் 1 ஜி.பி.க்கும் குறைவான நினைவகத்தையும், ரேமில் பாதி அளவையும் கொண்டு கணினியை செயல் படுத்திடும் திறன் கொண்டவைகளாக திகழ்கின்றன. இவ்வாறான மீச்சிறு (Tiny)லினக்ஸ் இயக்க முறைமைகளை கொண்டு மிகமெதுவாக செயல்படும் பழைய கணினிகளை குப்பைதொட்டியில் போடும்வரை செயல்படுத்தி பயன்பெறமுடியும் மேலும் பழுதடைந்து செயல்படாத கணினிகளில் thumb drive இன் வாயிலாக செயல்படுத்தி அவ்வாறான கணினியிலிருந்து தரவுகளை மீட்டெடுக்க அல்லது அதனை துவக்கி இயக்கஅல்லது துவக்க நினைவகபகுதிகளை மீட்டெடுத்திட முடியும் அதுமட்டுமல்லாது பொதுமக்கள் பயன்படுத்திடும் எந்தவொரு கணினியிலும் thumb drive இன் வாயிலாக அதனை இயங்க செய்து மிக பாதுகாப்பான தனிப்பட்ட சூழலை இதன் வாயிலாக உறுதிசெய்து கொண்டு நம்முடைய பணியை ஆற்ற முடியும் அவ்வாறான மீச்சிறு லினக்ஸின் இலகுரக இயக்கமுறைமைகளுள் ஒருசில பின்வருமாறு

1.Tiny Core எனும் மீச்சிறு லினக்ஸ் இயக்கமுறைமை செயல்படுவதற்காக 128MB நினைவகமும் 512MBரேமும் போதுமானவைகளாகும் மேலும் இதனை பயன்படுத்திடும்போது உரையின் திரைக்கு 11MBநினைகமும் வரைகலை பயனாளர் இடைமுகத்திரைக்கு 16MB நினைவகமும்போதுமானதாகும் Ethernet இணைப்பு இருந்தால் மட்டும் இது மிகபிரமாதமாக செயல்படும் என்றசெய்தியை மனதில் கொள்க இதில் GUI எனும்வரைகலை பயனாளர் இடைமுகப்புத்திரை தேவையில்லையெனில் இது 64MB ரேமில் மிகச்சிறப்பாக செயல்படும் வல்லமைகொண்டதாகும் இதனை tc-install அல்லது tc-install-GUI எனும் பயன்பாட்டினை இதிலுள்ள Apps எனும் உருவப்பொத்தானை சொடுக்குதல்செய்து நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளமுடியம் மேலும் Apps எனும் உருவப் பொத்தானைபயன்படுத்தி Samba போன்றவற்றை தெரிவுசெய்து அச்சிடுதல் போன்ற பல்வேறு பயன்பாடுகளைகூட பயன்படுத்தி கொள்ளமுடியும் இதனைபற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளவும் http://tinycorelinux.net/ எனும் இணையதள பக்கத்திற்கு செல்க

2.SliTaz எனும் மீச்சிறு லினக்ஸ் இயக்கமுறைமை செயல்படுவதற்காக 128MB நினைவகமும் 512MBரேமும் போதுமானவைகளாகும் மேலும் இதனை பயன்படுத்திடும்போது உரைகளின் திரைக்கு 11MBநினைவகமும் வரைகலை பயனாளர் இடைமுகத்திரைக்கு 16MB நினைவகமும்போதுமானதாகும் இது செயல்படுவதற்காக Ethernet இணைப்பு இருந்தால் மட்டும் மிகபிரமாதமாக செயல்படும் திறன் கொண்டுள்ளது துவக்கநிலை செயலின் போது . இதனை கொண்டுஉரைபயன்பாடு, இணையஉலா, படம் வரைதல், விரிதாள் என்பன போன்ற எண்ணற்ற பயன்பாடுகளை எளிதாக செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும் இதில் இணைய உலாமட்டும் மிகமெதுவாக செயல்படும் அந்நிலையில்இதனுடைய Midorஎனும் பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க எனபரிந்துரைக்கப்படுகின்றது .மிகமுக்கியமாக 51MBஅளவு கொண்ட கோப்பாக இருக்கின்ற இதனை ddஅல்லது Etcher ஆகியவை இல்லாமலேயே நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இதனைபற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளவும் http://slitaz.org/ எனும் இணையதளபக்கத்திற்கு செல்க

3. Porteus எனும் மீச்சிறு லினக்ஸ் இயக்கமுறைமையானது மிகுறைந்தஅளவு ஏறத்தாழ 270MB அளவு கொண்ட கோப்பாகவும் பெரியஅளவில் 350MB அளவு கொண்ட கோப்பாகவும் கிடைக்கின்றது இது செயல்படுவதற்கு குறுவட்டில்பாதி நினைவகமும் 1GB ரேமும்போதுமானவைகளாகும் இதனை நிறுவுகை செய்வதற்காகMATE, LXQT, LXDE, OpenBox, XFCE, Cinnamon, அல்லது KDE, ஆகியவற்றில் நம்முயை தேவைக்கு பொருத்தமானதை மட்டும் தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்க .இதனைபற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் இதில் தேவையான பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் http://www.porteus.org/எனும் இணையதளபக்கத்திற்கு செல்க

4.Bodhi லினக்ஸ் எனும் மற்றொரு மீச்சிறு லினக்ஸ் இயக்கமுறைமையானது ஏறத்தாழ 740MBஅளவு கொண்ட கோப்பாக இருக்கின்றது இதனை பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்தபின் இதனை செயல் படுத்தினால் நாமே ஆச்சரியப்படும் வகையில் வழக்கமான மேஜைக்கணினியில் செயல்படுவதை போன்று மிகச்சிறப்பாக செயல்படும் வல்லமை கொண்டுள்ளது இது செயல்படுவதற்காக 512MB ரேம் போதுமானதாகும் இதனை thumb driveஇல் dd அல்லது Etcher ஆகியவை கொண்டுபதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்து பயன்படுத்திகொள்ளமுடியும் இதில் பயன்பாடுகளை Ubuntuஇல் நிறுவுகை செய்வதை போன்றே Ubiquity என்பதிலிருந்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இதனைபற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளவும் https://www.bodhilinux.com/எனும் இணையதளபக்கத்திற்கு செல்க

5.Puppy லினக்ஸ் என்பது ஏறத்தாழ 300MB அளவு கொண்ட கோப்பாக இருக்கின்றது இது செயல்படுவதற்காக 1GB ரேம் போதுமானதாகும்பயன்படுத்த இது ஒரு இனிய நண்பனை போன்று விளங்குகின்றது இதனை thumb driveஇல் dd அல்லது Etcher ஆகியவை கொண்டுபதிவிறக்கம்செய்து அல்லது குறுவட்டில் CDஅல்லது நெகிழ்வட்டிDVDபதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்து பயன்படுத்திகொள்ளமுடியும் இதிலும் பயன்பாடுகளை Ubuntuஇல் நிறுவுகை செய்வதை போன்றே Flatpak,என்பதிலிருந்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இதனைபற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளவும் http://puppylinux.com/எனும் இணையதளபக்கத்திற்கு செல்க

Leave a comment