1
ஜாவா பாடம்-2 பகுதி-4

ஊப்ஸ்(oops) ஆனது பின் வரும் அம்சங்களைக் கொண்டுள்ளது.
1.      என்கேப்சுலேசன்
2.      அப்ஸ்ட்ராக்சன்
3.      இன்ஹெரிடன்ஸ்
4.      பாலிமார்பிசம்.
என்கேப்சுலேசன்.
கடை நிலை பயனருக்கு தெரிய தேவையில்லாவற்றை அவரிடம் இருந்து மறைப்பதே ஆகும்.
ஆக்சஸ் ஆனது தேவைப்படுவன்வற்றுக்கே வழங்கபடுகின்றது.இதை இன்ஃபர்மேசன் ஹைடிங்க் என்றும் அழைக்கலாம்.உதாரணத்திற்கு ஒரு டிவியை நீங்கள் பயம்படுத்த விரும்பினால் அதன் ஆன் மற்றும் ஆஃப் பட்டங்களை பயனர் அழுத்தினா;ல் போதும். இன்டெர்னல் ஆக ஒரு டிவி ஆனது பட்டனை அழுத்தியவுடன் என்னென நடக்கின்றது என கடைநிலை பயனருக்கு தெரிய வேண்டுயதில்லை.
அப்ஸ்ட்ராக்சன்.
முக்கியமற்ற தகவல்களை கண்டுகொள்ளாமல் முக்கியமான தகவல்களில் மற்றும் கவனம் கொள்ளுதலே அப்ஸ்ட்ராக்சன் ஆகும்.
இன் ஹெரிடன்ஸ்
ஒரு கிளாஸின் ஃபங்க்சனாலிட்டியை நீட்டுவிப்பது அதாவது எக்ஸ்டெண்ட் செய்வதே இன் ஹெரிடன்ஸ் ஆகும்.
அடிப்படை கிளாஸில் சில பண்புகளும் , மெத்தட்களும் இருக்கலாம். அதை இன் ஹெரிட் செய்யும் கிளாஸில் எதையும் மீண்டும் எழுதாமல் கூடுதலாக எது தேவையோ அதை மட்டும் சேர்த்துக் கொள்ளுதல் ஆகும்.
பாலிமார்பிசம்.
பாலிமார்பிசம் என்பது இரு லத்தீன் வார்த்தைகளின் மொத்தமாகும் பாலி என்றால் நிறைய என்றும் மார்ப் என்றால் ஃபார்ம்ஸ் ஆகும்.
ஒரு பொருளானது ஒன்றுக்கு மேற்பட்ட வடிவம் எடுப்பதே பாலிமார்பிசம் ஆகும். ஒரு நபர் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு ரோல் செய்யலாம். அதே போன்று ஒரு கிளாசோ அல்லது மெத்தடோ வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு மாதிரியாக செயல்படுதலே பாலிமார்பிசம் எனப்படும்.


Leave a comment