1
தொலைநகல்(FAX) இயந்திரம் இல்லாமலேயே இணையத்தின் வாயிலாக தொலைநகலை கையாளலாம்

இதற்காக முதலில் தொலைநகல் (FAX)அனுப்பவிரும்பும் ஆவணத்தை வருடுதல் கருவியால் அல்லது நம்முடைய திறன்பேசியால் வருடுதல் செய்து நகலெடுத்து ஒரு கோப்பாக உருவாக்கி கொள்க அல்லதுஏற்கனவே நம்முடைய கணினியில் மென்நகலாக இருக்கின்றதெனில்அந்த கோப்பினை தொலை நகல் அனுப்பிட பயன்படுத்தி கொள்ளலாம் அதன்பிறகு இதற்கான பயன்பாடுகளைகொண்டு இந்த கோப்புகளை தெலைநகலாக அச்சுபொறியால்அச்சிடபடாமலேயே அனுப்பிடவும் பெற்றிடவும்முடியும் மைக்ரோ சாப்டின் விண்டோ இயக்கமுறைமைகூட அச்சுபொறிஎதுவும் இல்லாமலேயே தொலைநகலை அனுப்பிடவும் பெறவும் ஆன வசதியை கொண்டுள்ளது இவை Outlook, Google Drive, Dropbox, Box, ஆகிய பயன்பாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றது என்ற கூடுதல்தகவலையும் மனதில் கொள்க

இணையத்தின் வாயிலாக தொலைநகல் அனுப்புவதற்காக ஏராளமான பயன்பாடுகள் பயன்பாட்டில் உள்ளன அடிக்கடி பயன்படுத்திடும் நபர் அல்லது நிறுவனங்கள் எனில் தொலைநகலை அனுப்பிடவும் பெறவும் RingCentral Fax எனும் பயன்பாடு உதவியாகஇருக்கும் இது மாதத்திற்கு$13எனும் கட்டணத்துடன் மிகப்பாதுகாப்பான தொலை நகல் பயன்பாடாக கிடைக்கின்றது இதனுடைய இணையமுகவரி https://prf.hn/click/camref:1101l3Rga என்பதாகும் எப்போதாவது பயன்படுத்துபவர் எனில்தொலைநகலை அனுப்பிடவும் பெறவும் MyFax எனும் பயன்பாடு போதுமானதாகும்இதனுடைய இணையமுகவரி http://www.kqzyfj.com/ என்பதாகும்

Leave a comment