1
பிளாக்செயின் தொழில்நுட்ப வழிகாட்டி-6-பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தபடும் விதிமுறைகளும் சொற்களும்-தொடர்ச்சி

பொதுவாக பயனாளர்களைப் பொருத்தவரையில் தரவுகளின் புலம் மிக முக்கியமானதாகும். பரிமாற்ற விவரங்கள், சொத்து விவரங்கள் போன்ற உண்மையான தரவுகள்அனைத்தும் இந்த புலங்களில்தான் சேமிக்கப்படுகின்றன. இந்த புலங்களில் ஹாஷ்ஆனது முந்தைய தொகுப்பின் ஹாஷ் மதிப்புகளை சேமிக்கின்றன (இது முந்தைய தொகுப்பிற்கான இணைப்பாக கருதுப்படும்), தொகுப்பு(block)கள் இந்த மதிப்புகளின் வாயிலாக இணைக்கப் படுகின்றன.1

பிளாக்செயினில் தரவுகளின் விநியோகம்

பிளாக்செயினுக்குள் அதன் தனித்துவமான தரவுகளின் சேமிப்பக அமைப்பு இருக்கின்றது , பிளாக்செயினில் தரவுகளி்ன்விநியோகமானது வேறுபட்ட அணுகு-முறையைக் கொண்டுள்ளது என்ற செய்தியை மனதில் கொள்க. அவை பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்ட வாடிக்கையாளர் சேவையாளர் மாதிரியைப் பின்பற்றுவதில்லை, மாறாக பியர் டு பியர்(P2P) மாதிரியைப் பின்பற்றுகின்றன.இதனுடைய P2P தரவுகளி்ன் விநியோக அணுகுமுறையே இந்த பிளாக்-செயினின் தடையற்ற தன்மைக்கு காரணமாகும் ; இதில் கட்டுப்படுத்துவதற்கான மைய அதிகார அமைப்பு எதுவும் இல்லை.2

வாடிக்கையாளர் சேவையாளர் மாதிரியைப் போலன்றி, இந்த பி 2 பி வலைபின்னலில் தரவுகளின் வலைபின்னலில் உள்ள அனைத்து பங்கேற்பாளர்களின் முனைமங்களிலும் சேமிக்கப்-படுகின்றன. அனைத்து தனிப்பட்ட முனைமங்களிலும் முழு ‘தொகுப்புகளின்’ நகல்களும் சேமித்து வைக்கப்படுகின்றன, மேலும் ஒரு குறிப்பிட்ட தொகுப்பில் செய்யப்படும் எந்தவொரு மாற்றமும் அனைத்து முனைமங்களிலும் புதுப்பிக்கப்-படுகின்றன.

பொதுவாக , வாடிக்கையாளர் சேவையாளர் மாதிரியில் தரவுகளானவை ஒரு மைய கட்டுப்படுத்திடும் அமைப்பால் சரிபார்த்த பிறகுதான் அவை தரவுதளங்களில் சேமிக்கப்படு-வது வழக்கமான நடைமுறையாகும்; ஆனால் பி 2 பி வலைபின்னலில் அவ்வாறு தனியாக ஒரேமையத்தில் கட்டுபடுத்திடும் அமைப்பு எதுவும் இல்லை, அவ்வாறாயின் இந்த பி 2 பி வலை-பின்னலில் உள்ள தரவுகளின் நம்பகத்தன்மை எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது? என்ற கேள்வி நம்மனைவரின் முன் கண்டிப்பாக எழும் நிற்க இந்த பிளாக்செயின் வலைபின்னலின் ஒவ்வொரு முனைமமும் மற்ற முனைமங்களின் தரவுகளின் சரிபார்ப்பு மையமாக அனைத்து செயல்முறைகளும் ஒருமித்த வழிமுறைகளை பின்பற்றி செயல்படுகின்றன என்பதுதான் இந்த கேள்விக்கான பதிலாகும்

தொகுப்பு சரிபார்ப்பு (Block Validation)

நாம் மேலே விவரித்தபடி சொத்துகளும் அதன் பரிமாற்றங்களும் பிளாக்செயினில் இணைக்கப்பட்ட தொகுப்புகளாக சேமிக்கப்படுகின்றன. சரியான பரிமாற்றங்கள் மட்டுமே பிளாக்செயினில் சேர்க்கப்படுகின்றன. தொழில்நுட்ப ரீதியாககூறுவதெனில், பிளாக்செயின் சரிபார்ப்பு என்பது தொகுப்பின் ஹாஷைக் கண்டுபிடிக்கும் செயல் முறையாகும். ஒரு பிளாக்செயினில், அனைத்து தொகுப்புகளும் சரிபார்ப்பு செய்தபிறகு மட்டுமே அதுபிளாக்செயினில் சேர்க்கப்படுகின்றன. பிளாக்செயினில் ஒவ்வொரு பரிமாற்றமும் நடைபெறும் போதெல்லாம் அது ஒரு தொகுப்பில் சேர்க்கப்படுகின்றன; சில நேரங்களில் ஒரு தொகுப்பிற்கு ஒரு பரிமாற்றமும் வேறுசில நேரங்களில் பல தொகுப்பிற்குள் பரிமாற்றங்களும் சேமிக்கப்படுகின்றன. இது தொகுப்பின் அளவு பிணையத்தின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்ததாகும். ஒரு பரிமாற்றமானது தொகுப்பில் சேர்க்கப்படும்போது, அது சரியான தொகுப்பாக பிளாக்செயினில் சேர்க்கப்படுவதற்கு முன்பு அது ஒரு சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தொகுப்பிற்கான ஹாஷ் மதிப்பை SHA256 போன்ற ஒருசில வழிமுறைகளைப் பயன்படுத்தி கணக்கிடலாம் .ஹாஷ் மதிப்பு ஒரு சில பண்புகளையும் கொண்டுள்ளது. இந்நிலையில் மிகமுக்கிய செய்தி என்னவென்றால், ஹாஷ் மதிப்பானது எதிரெதிராக இல்லாமல் இருக்க வேண்டும், அதாவது இரண்டு தொகுப்புகள் ஒரே ஹாஷ் மதிப்பைக் கொண்டிருக்கக்-கூடாது. ஒவ்வொரு தொகுப்பினையும் சுட்டிகாட்டுவதற்கு ஹாஷ் மதிப்பைப் குறிப்பிடப்படுவதால், அது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, ஹாஷ் மதிப்புகள் மாற்ற முடியாததாக இருக்க வேண்டும்.அதாவது தொகுப்பு தரவுகளை ஹாஷ் மதிப்பிலிருந்து மீட்டெடுக்க முடியாது

தொகுப்பு சரிபார்ப்பவர்கள் (Block Validators)

தொகுப்பு சரிபார்ப்பு செயல்பாட்டில் பங்கேற்கும் முனைமங்களே தொகுப்பு சரிபார்ப்பவர்கள் ஆவார்கள். சரிபார்ப்பவர்களின் முயற்சிக்கு ஏற்ற வெகுமதி அவர்களுக்கு அளிக்கப் படுகின்றது, (உண்மையில் அவர்கள் செலவழித்தசக்தியை கணக்கிட்டு அவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படுகின்றது). கிடைக்கக்கூடிய முனைமங்களில் இருந்து சரிபார்ப்பவரைத் தேர்ந்தெடுப்பதற்கு வெவ்வேறு பிளாக்செயின் நெறிமுறைகள் வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. அவ்வாறான ஒரு சில நெறிமுறைகள் பின்வருமாறு

PoW என அழைக்கப்பெறும் பணிச்சான்று (Proof of Work)எனும் நெறிமுறை

இந்த PoW இல், சுரங்க சவால் ஒன்று இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் காத்திருக்கின்றது. இதில் சுரங்கத் தொழிலாளர்கள் (miners )அனைவரும் அடுத்த தொகுப்பினைச் சேர்க்க ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றார்கள். முதலில் தீர்வைக் கண்டுபிடிக்கும் சுரங்கத் தொழிலாளிக்கு ஒரு நிலையான வெகுமதி வழங்கப்படுகின்றது. உண்மையில், அதிக கணக்கீட்டு சக்தியைக் கொண்ட முனைமங்கள் பொதுவாக இந்த பந்தயத்தில் வெற்றிபெறுகின்றன. பிட்காயின்களில் இந்த PoW எனும் வழிமுறையே பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன.

குறிப்பு நாம் வாழும் இந்த மண்ணிற்கு கீழேஉள்ள கனிமங்களை வெட்டியெடுத்திடுபவரை சுரங்க தொழிலாளி எனஅழைப்பதை போன்று இணையத்தில் பிளாக்செயினில் புதிய வளங்களை தேடிக் கொண்டுவருபவரை அவ்வாறே சுரங்க தொழிலாளி எனஅழைக்கப்படுகின்றது

PoS என அழைக்கபெறும் பங்கு ஆதாரம் (Proof of Stake)எனும் நெறிமுறை

இது PoW எனும் நெறிமுறைக்கு பொதுவான மாற்று நெறிமுறையாகும். இதில், எந்தவொரு கணினியிலும் அவர்கள் வைத்திருக்கும் நாணயங்களின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு செல்லுபடியாக்கிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். குறைந்த எண்ணிக்கையிலான நாணயங்களைக் கொண்ட முனைமங்களை விட அதிக எண்ணிக்கையிலான நாணயங்களைக் கொண்ட முனைமங்கள் தேர்ந்தெடுக்கஇதில் அதிக வாய்ப்பு உள்ளன. இந்த PoS இல் வெகுமதியானது பரிமாற்ற கட்டணத்தின் வடிவத்தில் உள்ளது, இதில் சரிபார்ப்பவர்களுக்கு பணம் செலுத்துவதற்காக புதிய நாணயங்கள் உருவாக்கப்படுவதில்லை. தற்போது, பிளாக் காயின், NXT Peercoin ,Blackcoin ஆகியவை இந்த PoSநெறிமுறையைப் பயன்படுத்துகின்றன. Ethereumஆனது 2018 க்குள் இந்த நெறிமுறைக்கு மாறிகொள்வதற்காக திட்டமிட்டிருந்தது.

PoAஎன அழைக்கபெறும் செயல்பாட்டின் சான்று (Proof of Activity)எனும் நெறிமுறை

PoA என்பது PoS , PoW ஆகியவற்றி%

Leave a comment