1
பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கும் வரைபடங்களில் மேம்பட்ட குரல் வழிகாட்டலை கூகிள் அறிமுகப்படுத்துகிறது-

கூகுள் ஆனது அதன் பிரபலமான கூகுள் மேப்ஸ் வழிசெலுத்தல் பயன்பாட்டில் பார்வையற்றோருக்கான புதிய அணுகல் வழிமுறையை தற்போது செயல்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கவிருக்கின்றது.

இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் , இணையத்தில் கூட்டாண்மை குழு வணிக ஆய்வாளர் Wakana Sugiyama என்பவர் இவ்வாறான புதிய வசதிகளை பற்றி விளக்கமளித்துள்ளார், உலக பார்வை தினத்தை முன்னிட்டு இந்த வசதியை வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளர். தற்போது உலகில் ஏறத்தாழ 217 மில்லியன் மக்களுக்கு மிதமானது முதல் கடுமையானது வரையிள் பார்வைக் குறைபாடுகள் இருப்பதையும், உலகம் முழுவதும் பார்வையற்ற 36 மில்லியன் மக்கள் இருப்பதையும் மேற்கோள் காட்டி, கூகுள் மேப்ஸ் வழிசெலுத்தல் பயன்பாட்டைப் பயன்படுத்தி வசதியான நடைபயணங்களுக்கான விரிவான வாய்மொழி வழிகாட்டுதலையும் அறிவிப்புகளையும் இந்த புதிய வசதியானது செயல்படுத்தவிருக்கின்றது.

அறிமுகமில்லாத பாதைகளில் செல்லும்போது, குறிப்பாக பார்வையற்றவர்கள் தனியாக செல்லும்போது கூடுதல் நம்பிக்கையை அளிப்பதே இந்த வசதியின் குறிக்கோளாகும். பயனாளர்கள் சரியான பாதையில் செல்லும்போது, அடுத்ததாக எவ்வளவு தூரத்தில் திரும்புவேண்டும்,என இது எச்சரிக்கைசெய்கின்றது பரபரப்பான பாதைகளில் கடக்க வேண்டியநிலையில் இந்த வதியானது முன்கூட்டியே எச்சரிக்கை செய்கின்றது. இந்த பயன்பாடானது நாம் செல்லும் வழியில் எந்தஇடத்தில் திரும்பவேண்டும் என்ற வாய்மொழி அறிவிப்புகளையும் வழங்குகின்றது.

கூகுள் மேப்ஸின் நடைபயிற்சிக்கான குரல்வழி வழிசெலுத்தல் வசதியானது ஆண்ட்ராய்டு , ஐஓஎஸ் சாதனங்களில் ஆங்கிலத்திலும், ஜப்பானிய மொழியிலும் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது. இதில் கூடுதல் மொழிகளுக்கான ஆதரவு “one the way”, என்பதில் பட்டியலுக்கு சரியான கால அட்டவணை எதுவும் இதுவரையில் கொடுக்கப்படவில்லை. இந்த புதிய வசதியை செயல்படுத்துவதற்காக:

முதலில் இதற்கான கூகுளின் வரைபடத்தைத் திறக்கவும்.

தொடர்ந்து அதன் அமைப்புகளைத் திறந்து “Navigation.” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உடன் விரியும் பட்டியலின் கீழே “Walking options” எனும் தலைப்பிற்கு கீழே “”Detailed voice guidance,”” இயக்குவதற்கான விருப்பம் இருப்பதை காணலாம். அதனை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயல்படுத்தினால் போதுமானதாகும்

Leave a comment