1
Able2Extract PDFஎன்பதன் துனையுடன் தரவுகளை PDF இலிருந்து Excelஇற்கு எளிதாக பிரித்தெடுத்து கொண்டுவரலாம் ஒரு செயல்திட்டத்தில் சில அட்டவணைகள் / தரவுகளை PDF கோப்பிலிருந்து எக்செல் இற்கு பிரித்தெடுக்க

வேண்டியிருந்தது. . இவ்வாறு PDF கோப்பிலிருந்து நிதித் தரவுகளை பிரித்தெடுத்து எக்செல் கோப்பிற்கு கொண்டு செல்லவேண்டிய சூழ்நிலையில். எக்செல் அட்டவணயாக மாற்றுவதற்கு இணையத்தில் நேரடியாக பல்வேறு வழிமுறைகளில் முயற்சித்தும் எதிர்பார்த்தவாறு எதுவும் சரியாக செயல்-படவில்லை. அதனால், எக்செல்லில் அவ்வாறான தரவுகளை அட்டவணையாக கைமுறையாக தட்டச்சு செய்ய வேண்டியிருந்தது. இருந்தபோதிலும் இதற்கான கருவி வேறு ஏதேனும் இருக்கின்றதாவென இணையத்தில் தேடிடும்போது இறுதியில் ஒருவழியாக Able2Extract PDF என்பது ஆபத்து உதவியாளராக இருக்கின்றது இது பயன்படுத்த எளிதானது ஒரு சிலநொடிகளில் அவ்வாறான பணியைஇது செயல்படுத்தி முடித்துவிடுகின்றது இதனை பயன்படுத்தி கொள்வதற்காக நமக்கென தனியாக கணக்கு ஒன்றினை துவங்கிடுமாறு அல்லது நம்முடைய மின்னஞ்சல் முகவரியை அல்லது PDF கோப்புகளை வேறொருவரின் இணைய-தளத்தில் பதிவேற்றிடுமாறு நம்மிடம் கோராது மற்ற கருவிகளை போன்றே இந்த Able2Extarct என்பது மடிக்கணினி / மேஜைக்கணினியில் பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்து பயன்படுத்தி-கொள்ள முடிந்த ஒரு சிறந்த கருவிபயன்பாடாகும் இது விண்டோஸ், மேக், லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது மேலும், இந்த கருவி PDF ஐ எக்செல், வேர்ட், பவர்பாயிண்ட், HTML, ஆட்டோகேட், இமேஜ் போன்ற பல்வேறு கோப்பு வடி-வமைப்பு-களுக்கு மாற்ற முடியும். இதனை பயன்படுத்தி கொள்ள விழைந்தால் https://www.investintech.com/able2extract.html?invt=68407c141 எனும் தளத்திலிருந்து இதற்கான கோப்பினை பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவகை செய்து கொள்க .இந்த கருவியின் உதவியுடன் PDF ஐ விரைவாக எக்செல் ஆக மாற்றுவதற்கான படிமுறைகள் பின்வருாறு:

1. PDF கோப்பை நம்முடைய கணினியில் சேமிக்கவும்.

2. தொடர்ந்து Able2Extract எனும் இந்த கருவியை செயல்படுத்திடுக. சோதனை பதிப்பெனில், Continue எனும் பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்குக.

3. பின்னர் விரியும் Able2Extract எனும் திரையில் Open எனும் பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்குக.

4. அதன்பின்னர் விரியும் Open எனும் உரையாடல் பெட்டியில், எக்செல் ஆக மாற்ற விரும்பும் PDF கோப்பைக் தேடிபிடித்து தெரிவுசெய்து சொடுக்குக

5. பின்னர் PDF இன் முழு கோப்பையும் எக்செல் ஆக மாற்ற விரும்பினால், All எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக PDF ஆவணத்தின் ஒரு பகுதியை மட்டுமே எக்செல் ஆக மாற்ற விரும்பினால், Area எனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக . ஒரு பகுதி (அட்டவணை ) மட்டுமெனில் PDF கோப்பிலுள்ள தேவையான அட்டவணையை மட்டும் தேர்ந்தெடுக்கவும்.

7.பின்னர் Excelஎனும் விருப்பத்தை தேரிவுசெய்து சொடுக்குக.

8. அதன்பிறகு Convert to Excel எனும் உரையாடல் பெட்டியின், தானியங்கி பெட்டியில் உள்ள ‘Convert’ எனும் பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்குக. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தானியங்கி விருப்பம் நாம் விரும்பிய முடிவைக் கொடுக்கும். இன்னும் கட்டுப்பாட்டை விரும்பினால், Defineஎனும் பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து தேவையானவாறு மாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.

9. இறுதியாக save எனும் , பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து எக்செல்கோப்பாக சேமித்துகொள்க .

Leave a comment