1
பைதான் எனும் கணினிமொழிஉருவாக்கும் சூழலை (IDE) எவ்வாறு நம்முடைய விண்டோஇயக்குமுறைமைசெயல்படும் கணினியில் நிறுவுகை செய்வது

பைதான் மொழியில் உருவாக்கப்படும்பயன்பாட்டிற்கான குறிமுறைவரிகளை இயந்திர மொழி குறியீடாக எவ்வாறு உருமாற்றம் செய்து தொகுப்பது என அறியாத தெரியாதபுதியவர்கள்கூட தான்உருவாக்கிய பயன்பாட்டின் குறிமுறைவரிகளை அடுத்தபடிமுறையான இயந்திர மொழி குறியீட்டிற்கு உருமாற்றம் செய்து தொகுத்திடும் செயலை பைத்தான் எனும் கணினிமொழியானது நமக்காக அதனை செய்து கொள்கின்றது ,அதுமட்டுமல்லாமல் நம்முடைய நிரல்களை சில நேரங்களில் உடனடியாகவும், ஒரு வழியில்,நம்முடைய குறிமுறைவரிகளை எழுதும்போது பரிசோதித்து பார்த்திடவும் நம்மை அனுமதிக்கிறது. இந்த பைதான் எனும் கணினிமொழியினை மிகஎளிதாக கற்றுகொள்ளமுடியும் இவ்வாறான வசதிவாய்ப்பினை கொண்ட பைதான்எனும் கணினிமொழியை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துகொள்வதற்காக https://www.Python.org/ எனும் இணையதளபக்கத்திற்குசென்று downloadஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக தொடர்ந்து விரியும் திரையில் இதனுடைய சமீபத்திய பதிப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து பதிவிறக்கம்செய்து கொள்க அதனை தொடர்ந்து இந்த பதிவிறக்கம்செய்த கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் இயல்புநிலை இடவமைவை ஏற்றுகொள்க உடன் புதிய கோப்பு ஒன்று விண்டோஇயக்கமுறைமையில் நிறுவுகைசெய்யவிருக்கின்றது அனுமதிக்கவா என கோரும் செய்திபெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் Yes எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக நம்முடைய ஆமோதிப்பினை தொடர்ந்து பைத்தான் கணினிமொழியானது நம்முடைய விண்டோ செயல்படும் கணினியில் நிறுவுகை செய்திடும் பணியை செயல்படுத்தி முடித்துவிடும் அதுவரைபொறுமையாக காத்திருக்கவும் பொதுவாக கணினிமொழிகளில் குறிமுறைவரிகளை எழுதவதற்காக text editor என்பது தேவையாகும் அதற்கான IDE உடன் ஒருங்கிணைந்த உரைபதிப்பான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பைதான் மொழியில் இதற்காக IDLE 3 , NINJA-IDE ஆகிய இருவாய்ப்புகள் நமக்காக தயாராக இருக்கின்றன1

பைதான் எனும் கணினிமொழியில் குறிமுறைவரிகளை எழுதவதற்கான IDE சூழல்தான் IDLE 3 ஆகும் இதில் பைத்தானின் முக்கிய திறவுகோள்சொற்கள்மட்டும் தனியாக மேம்படுத்தி காண்பிக்கும் மேலும் இதிலுள்ள Run எனும் கட்டளையைசெயல்படுத்தினால் உடனுக்குடன் எளிதாகவும் விரைவாகவும் நாம் எழுதிய குறிமுறைவரிகளை சரியாகசெயல்படுமாவென பரிசோதித்து சரிபார்த்து கொள்ளஉதவுகின்றது இதனை செயல்படுத்தி திரையில் தோன்றசெய்வதற்காக Start (or Window) எனும் பட்டியலை தோன்றிடசெய்திடுக அதில் python என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

NINJA-IDE இன் சூழலில் பைத்தானின் முக்கிய திறவுகோள்சொற்களைமட்டும் தனியாக மேம்படுத்தி காண்பிப்பது மட்டுமல்லாமல் குறிமுறைவரிகளைஎழுதிஉருவாக்கிடும்போது தேவையான இடங்களில் மேற்கோள்கள் ,அடைப்புகுறியீடுகள் ஆகியவற்றை தானாகவே பூர்த்தி செய்து பிழையேதும் வாராமல் பாதுகாத்து கொள்ளஉதவுகின்றது மேலும் இதிலுள்ள Run எனும் கட்டளையைசெயல்படுத்தினால் உடனுக்குடன் எளிதாகவும் விரைவாகவும் நாம் எழுதிய குறிமுறைவரிகளை சரியாகசெயல்படுமாவென பரிசோதித்து சரிபார்த்து கொள்ளஉதவுகின்றது இதனை http://ninja-ide.org/downloads/ எனும் இணையதளபக்கதத்திலிருந்து பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்து கொள்க2

இதில் print எனும் திறவுகோள் சொல்லானது மேற்கோள்கள் ,அடைப்புகுறியீடுகள் ஆகியவற்றிற்குள் உள்ளவற்றை அச்சிடுவதற்காக பயன்படுகின்றது

import எனும் திறவுகோள் சொல்லானது மேலும் பட்டியலான திறவுகோள் சொற்களை மேலேற்றம் செய்திட பயன்படுகின்றது புதிய கோப்பினை IDLE அல்லது Ninja இல் துவக்கி அதற்கு pen.py என பெயரிட்டிடுக

எச்சரிக்கை : கோப்புகளுக்கு turtle.py எனும் பெயரில்சேமித்திடாதீர்கள் ஏற்கனவேஇந்த turtle.py எனும் பெயருடையகோப்பானது பைதானில் ஒருசில செயலிகளை கட்டுபடித்திடபயன்படுகின்றது அதனால் பைதான் மொழியை எந்தகோப்பினை செயல்படுத்துவது என குழப்பம் செய்துவிடும்

இந்த turtle கோப்பினை பதிவேற்றம் செய்து கொணஂடபின்னர் பின்வரும் குறிமுறைவரிகளை உள்ளீடுசெய்து இயக்குக

turtle.begin_fill()

turtle.forward(100)

turtle.left(90)

turtle.forward(100)

turtle.left(90)

turtle.forward(100)

turtle.left(90)

turtle.forward(100)

turtle.end_fill()

பைதான் சூழலில் turtle.clear()எனும் திறவுகோள் சொற்களானது வரைபடபகுதியை அழித்து நீக்கம் செய்திடபயன்படுகின்றது அதனோடு turtle.color(“blue”) எனும் திறவுகோள் சொற்களானது வரைபடத்தில் நீலவண்ணத்தினை கொண்டுவர பயன்படுகின்றது மேலும்

import turtle as t

import time

t.color(“blue”)

t.begin_fill()

counter = 0

while counter < 4:

t.forward(100)

t.left(90)

counter = counter+1

t.end_fill()

time.sleep(2)

ஆகிய குறிமுறைவரிகள் மிகசிக்கலானநிலையை எளிதாக கடந்து செல்ல உதவுகின்றது

Leave a comment