1
.ஃபேஸ்புக்கிற்கு மாற்றாக WT:Social எனும் சமுதாயவலைபின்னல்ஒரு அறிமுகம்

பொதுவாக போலி செய்திகளாலும் பிற விளம்பர நிதியுதவிகளாலும் தற்போதுநாமெல்லோரும் பயன்படுத்தி கொண்டுவருகின்ற சமுதாய வலைதளங்களில் குறைந்த தரம் வாய்ந்த ஊடகங்கள் எழுச்சியுறுகின்றன அதனால் பெரும்பாலும் விளம்பரத்தால் ஆதரிக்கப்படுகின்ற ஃபேஸ்புக் போன்ற மிகவும் பிரபலமான சமூக வலைதளங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் சமுதாய வலைதளங்கள் அனைத்திலும் செயல்படுகின்ற குறைந்த தரம் வாய்ந்த ஊடகங்கள் முற்றிலும் விளம்பர ஆரதவுடன் மட்டுமே இயங்குகின்றன அதாவது பயனாளர்கள் அந்த தளங்களில் விரியும் விளம்பரங்களை சொடுக்குவதன் வாயிலாக அவையனைத்தும் தேவையான அளவிற்கு போதுமானவருவாயை ஈட்டிடுகின்றன இதனை தவிர்த்து விளம்பரம் இல்லாத தன்னார்வளர்களின் தனிப்பட்ட நன்கொடைகளில் மட்டுமே செயல்படுமாறு புதியWT:Social என்பது கட்டமைக்கப்பட்டுள்ளது இது ஃபேஸ்புக்கிற்கு மாற்றாக சமுதாய வலைதளமாக வலம் வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது WT என சுருக்கமாக அழைக்கப்படும் WikiTribune எனும் இந்த புதிய சமுதாய வலைதளத்தின் இணையதளபெயர் WT:Social ஆகும் இது அனைவரின் ஒத்துழைப்புடன் திருத்தக்கூடிய சமூக வலைதளைமாக இந்த புதிய வலைதளம்விளங்கும் என்றும், இதில் எந்த விளம்பரமும் பேவாலும்(Paywall) இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது பொதுவாக சமுதாய வலைதளங்கள்அனைத்தும் பொதுமக்கள் அனைவரையும் தங்களுடைய தளங்களை சொடுக்குதல் செய்து அவற்றிலேயே மூழ்கிடுமாறு அடிமையாக்குவதையே நோக்கமாக கொண்டுள்ள தற்போதைய நிலையில் இந்த புதிய தளமானது உண்மையில் பொதுமக்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குவதே தங்களின் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளது அவ்வாறான மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில்இந்த தளத்தின் பெயர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றதுஇது பயனாளர்கள் நண்பர்கள், குடும்பஉறுப்பினர்கள் உறவினர்கள் சக ஊழியர்கள் ஆகிய அனைவரையும் தங்களுடைய தனிப்பட்ட அழைப்பிதழ் இணைப்புகளுடன் தானாகவே சேர்க்க அனுமதிக்கின்றது அதாவது இந்த தளத்தில் நாம் உள்நுழைவு செய்திட பதிவுசெய்திடும்போது circle of friends எனும் அழைப்பை தெரிவுசெய்து அதில் நம்முடைய நண்பர்களை ஒரு குழுவாக அழைக்கலாம், அதனை தொடர்ந்த அவர்கள் அனைவரும் தானாகவேஇந்த தளத்தில் ஒருவருக்கொருவர் நட்பு கொள்வார்கள்

மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும்https://wt.social/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Leave a comment