1
விக்கிபீடியாவில் 900 ஆவது பதிவு
6 ஜுலை 2014இல் தமிழ் விக்கிபீடியாவில் எழுதத் தொடங்கி, அண்மையில்  900 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன். இதற்கு முன்னர் 700 பதிவுகளை நிறைவு செய்து அது தொடர்பான அனுபவங்களை ஜனவரி 2019இல் எழுதியிருந்தேன். அண்மையில் விக்கிபீடியாவில் சில போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அவற்றில் கலந்துகொண்டு எழுத ஆரம்பித்த நிலையில், மிகவும் குறுகிய காலகட்டத்தில் அதிகமான எண்ணிக்கையிலான கட்டுரைகளை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. 

பொதுவான விதியாக கொடுக்கப்படுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகள் உருவாக்கப்படவேண்டும், அல்லது ஏற்கனவே உள்ள கட்டுரைகள் விரிவாக்கப்படவேண்டும். ஒவ்வொரு போட்டிக்கட்டுரையும் குறைந்தது 300 சொற்களையும், 6000 பைட்டுகளையும் கொண்டிருக்கவேண்டும் என்பது பொதுவான விதியாக இருந்தது.


ஆசிய மாத கட்டுரைப்போட்டி : 1 நவம்பர் 2019 - 7 டிசம்பர் 2019 

வேங்கைத்திட்டம் 2.0 : 10 அக்டோபர் 2019 -10 ஜனவரி 2020 

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் : 1 நவம்பர் 2019 -10 ஜனவரி 2020


நவம்பர் இறுதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்த ஆசிய மாத கட்டுரைப்போட்டி ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு  7 டிசம்பர் 2019 அன்று நிறைவு வெற்றது. மற்ற இரு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  போட்டிகள் தொடர்பான விவரத்தை கீழே உள்ள அந்தந்த தலைப்பினைச் சொடுக்கி அறிந்துகொள்ளலாம்.  

விக்கிப்பீடியா : ஆசிய மாதம்

விக்கிப்பீடியா : வேங்கைத்திட்டம் 2.0

விக்கிப்பீடியா : பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019
வேங்கைத்திட்டத்தில் இணைந்து எழுத ஆரம்பித்தபோது, ஆசிய மாதம் போட்டி அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு விதியாக ஆசிய மாதம் போட்டியில் எழுதப்படும் கட்டுரைகள் வேங்கைத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதுவே பல நிலைகளில் அமைந்த கட்டுரைகளை எழுத வாய்ப்பினைத் தந்தது.


விக்கிபீடியாவில் இடம் பெறாத, ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து தமிழில் இல்லாத பதிவுகளாக ஆரம்பிப்பதையும், மேம்படுத்துவதையும் தொடர்ந்து செய்து வருகிறேன். 

தமிழகத்தில் கொண்டாடப்படுகின்ற பல விழாக்களைப் பற்றிய பதிவுகள் விக்கிபீடியாவில் இடம்பெற வேண்டும் என்ற நன்னோக்கில் அவ்வாறான விழாக்களைப் பற்றிய பதிவுகளைப் பதிய ஆரம்பித்தேன். அந்த வகையில் வாழைப்பழம் சூறைவிடும் விழாஆற்றுத்திருவிழாமீன்பிடித் திருவிழா உள்ளிட்ட பல விழாக்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி, உரிய மேற்கோள்களுடன் பதிந்தேன்.

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் களப்பணியாக புத்தர் சிலைகளைத் தேடிச் சென்றபோது அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகேயுள்ள கலிங்கமேடு என்னுமிடத்தில் உள்ள சிற்பங்களைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். அங்குள்ள சிற்பங்கள் முதலாம் ராஜராஜ சோழன் மகனான இராஜேந்திர சோழனின் வெற்றியின் அடையாளமாக கலிங்க நாட்டிலிருந்து (தற்போதைய ஒடிசா மாநிலத்தின் வட பகுதி) கொண்டுவரப்பட்டவையாகும்.  

அவற்றை புகைப்படம் எடுத்து, உரிய மேற்கோள்களுடன் கலிங்கச் சிற்பங்கள், செங்கமேடு என்ற தலைப்பில் ஒரு கட்டுரையினை ஆரம்பித்தேன். 

புதுக்கோட்டையில் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய இணையத்தமிழ்ப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டபோது விக்கிபீடியா தொடர்பாக வகுப்பு எடுக்கும் நல்வாய்ப்பினைப் பெற்றேன். அப்போது திரு என்னாரெஸ் பெரியார், திரு நீச்சல்காரன் ஆகியோரைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றி வருகின்ற, வரலாற்று ஆர்வலர், தொல்லியல் ஆர்வலர், கவிஞர், சிறந்த நிர்வாகி என பன்முகங்களைக் கொண்ட திரு நா.அருள்முருகன் அவர்களைப் பற்றி நேரடியாக ஒரு பதிவினை ஆரம்பித்தேன். விக்கிபீடியாவில் ஒரு புதிய பதிவினை ஆரம்பிக்கும் முறையை முடிந்தவரை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பகிர்ந்துகொண்டேன். பின்னர் தொடர்ந்து அவரைப் பற்றிய பதிவினை மேம்படுத்தினேன். அக்கட்டுரை விக்கிபீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சியக் கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் என்ற குறிப்போடு அதனை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அப்பதிவினை மேம்படுத்தி வருகிறேன். ஆரம்பிக்கப்படுகின்ற கட்டுரைகள் நீக்கப்படாமலிருக்க முயற்சி மேற்கொள்கிறேன். இவ்வாறான முயற்சிகளுக்கு சக விக்கிபீடியர்கள் பெரிதும் துணை நிற்பதோடு, தம் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றார்கள். 

தஞ்சாவூரிலுள்ள ஏடகம் அமைப்பின் சார்பாக, அதன் நிறுவனர் முனைவர் மணி.மாறன் தலைமையில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள கானாடுகாத்தான் அரண்மனை, ஆத்தங்குடி அரண்மனை, அரண்மனை சிறுவயலில் உள்ள மருதுபாண்டியர் கோட்டை, மருதுபாண்டியர் நினைவாலயம், காளையார்கோயில், திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றோம். அப்பயணம் விக்கிபீடியாவில் இரு புதிய பதிவுகளைத் தொடங்க உதவியது.




விக்கிபீடியாவில் ஆத்தங்குடி தரைக்கற்கள், கானாடுகாத்தான், கானாடுகாத்தான் கரைமேல் அய்யனார் கோயில், கானாடுகாத்தான் அழகிய நாச்சியம்மன் கோயில், கானாடுகாத்தான் வரதராஜப்பெருமாள் கோயில் ஆகியவை பற்றி பதிவுகள் இருந்தன. இந்த இரு அரண்மனைகளைப் பற்றிய பதிவு இல்லை என்பதை அறிந்ததும், அவற்றைப் பற்றி புதிய பதிவுகளைத் தொடங்கினேன். அரண்மனையில் உள்ளே புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லாத நிலையில் அரண்மனையின் முகப்பினை மட்டுமே புகைப்படம் எடுக்க முடிந்தது. அதனை எடுத்து விக்கிபீடியா கட்டுரையில் இணைத்தேன். 

வேங்கைத்திட்டம் போட்டிக்காக நெல்லூர் சோழர்கள், மைசூர் வெற்றிலை, தொண்டைமான் வம்சம், பண்டைய தமிழகத்தில் பெயர் சூட்டும் மரபுகள், பெங்களூர் பழைய மடிவாலா சோமேஸ்வரர்கோயில், டோம்லூர் சொக்கநாதசுவாமி கோயில், சுவாதி பிரமல், லீனா நாயர் உள்ளிட்ட தலைப்புகளில் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. அடுத்து தமிழ் விக்கிபீடியாவில் இல்லாத, தென் இந்திய மாநிலங்களில் உள்ள அருங்காட்சியகம் தொடங்கி, அதனைத் தொடர்ந்து பிற அருங்காட்சியகங்களைப் பற்றிய பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆசிய மாதம் தொடர்பாக ஒரு நாட்டினைத் தெரிவு செய்து அங்குள்ள பண்பாடு, கலை, சமயம் என்ற நிலையிலான பதிவுகள் ஆரம்பிக்க முடிவெடுத்து, இந்தோனேசியாவி%

Who Voted

Leave a comment