1
தொத்து வியாதிகள் - சிறுகதைஅருண்.விஜயராணி


இப்ப நான் உங்களை ஒஸ்ரேலியாவுக்கு கூப்பிட்டது, ஒவ்வொரு நாளும் மூட்டை மூட்டையாக எனக்கு புத்தி சொல்லவோ...?" 

"உந்தக் கண்றாவியளைக் காட்டத்தான் என்னைக் கூப்பிடுகிறாய் என்று தெரிந்திருந்தால் அங்கேயே நின்றிருப்பன்."
 

"பின்னப் பயந்து வாழ்ந்திட்டால் சரி... கொஞ்சம் தலையை நிமிர்த்திவிட்டால்...அது கண்றாவி அப்படித்தானே...?"
 

சுட்டுவிரலை முகத்துக்கு எதிரே நீட்டி புருவத்தை மேலே உயர்த்தி, நிமிர்ந்து நிற்கும் மகளை வியப்புடன் பார்த்தாள் அருளம்மா.
 

மகளா பேசுகிறாள்...? ஒஸ்ரேலியாவுக்கு வந்து எப்படி மாறிவிட்டாள். உடையில் பேச்சில், உறவாடுவதில்...?
 

"அம்மா... எனக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா... என்று கல்யாணம் முற்றாக்க முன்பு ஒருக்கால் அப்பாவைக் கேட்கச்சொல்லு அம்மா."
 

ஒரு காலத்தில் அப்பாவுக்குப்பயந்து பயந்து தாயின் சேலைத்தலைப்பால் தன் முகத்தை மூடிக்கொண்டு காதோரம் கிசு கிசுத்த சுபாஷினி, பயத்தைப்பற்றி இப்போது எப்படி எடுத்தெறிந்து பேசுகிறாள்.
 
"என்ன பேசாமல் இருக்கிறீங்கள். முன்னர் நாங்கள் அப்பா அம்மாவுக்கு முதலில் பயம். பிறகு ரீச்சருக்குப்பயம்.... பிறகு பக்கத்து வீட்டாருக்குப்பயம்.... பிறகு ஊருக்குப்பயம்.... கடைசியில் புருஷனுக்குப்பயம்.... இப்படிப் பயத்திலேயே பொம்பளையின்ட சீவியம் முடிஞ்சு போகும்..." என்றாள் சுபாஷினி. 

"இதையெல்லாம் ஏன் பயம் எண்டு நினைக்கிறாய். மரியாதை எண்டு நினைச்சுப்பார். கட்டுப்பாடென்று நினைச்சுப்பார். அப்பா அம்மாவின்ட சொல்லுக்கு கட்டுப்படேக்கில்ல நல்ல பிள்ளையா வளர்கிறம். ரீச்சருக்குபயப்படும்போது நன்றாக படிக்கிறாய்.... ஊருக்கு கட்டுப்பட்டு நடக்கேக்குள்ள மரியாதையாக வாழப் பழகுகிறாய்...." அருளம்மா நிதானமாகச் சொன்னாள்.
 

"நிற்பாட்டம்மா.... இப்படியே கதைச்சு கதைச்சு... உன்னுடைய வாழ்வை நாசமாக்கிப்போட்டாய்... என்னுடைய வாழ்க்கையையும் நாசமாக்கிப் போடாதை."
 

"எந்தத் தாயும் தன்ர மகளின்ர வாழ்க்கை நாசமாகிப்போறதை விரும்ப மாட்டாள் சுபா..."
 

"ஆனால், நீ ஆசைப்படுறாய். அதுதான் அந்தக் கஞ்சனோடு சேர்ந்து என்னை வாழச் சொல்லுறாய். போயும் போயும் தேடிப்பிடிச்ச ஒரு கஞ்சனைத்தானே அப்பா எனக்கு கட்டித்தந்தவர் ." சுபாஷினியின் குரல் உயர்ந்தது.
 

"பொத்தடி வாயை.... ஊரில இருக்கேக்குள்ள புருஷன் நல்லவர். ஒஸ்ரேலியாவுக்கு வந்தவுடன் கஞ்சனா மாறிட்டாரோ...?"
 

"அங்கே அப்பா குடுத்த சீதன வீட்டுக்கு வாடகையும் கட்டாமல் சம்பளத்தை எடுத்துச் செலவழிக்கேக்குள்ள எப்படி கஞ்சத்தனம் வரும்"
 

"அப்படி வா வழிக்கு.... ஊரிலை உன்னை வேலைக்கும் அனுப்பாமல் நல்லாத்தான் வைச்சிருந்தவர். இங்கு வந்து கொஞ்சம் காசை இறுக்குகிறார் எண்டால்... அது தேவையைப் பொறுத்தது எண்டு உனக்கு ஏன் விளங்கேல்லை...."
 

"உங்கடை மருகமகனுக்கு விளங்கேல்லை எண்டு சொல்லுங்கோ... அங்க நான் உழைக்கேல்ல... இங்கை உழைக்கிறன். என்ர விருப்பத்துக்கு ஒரு உடுப்பை வாங்கினால் என்ன... படத்துக்குப்போனால் என்ன...?"
 

"உன்னை மாதிரி மருகனும் உழைக்கிறார் என்றிட்டு, ஒவ்வொரு கிழமையும் உடுப்பு வாங்க வெளிக்கிட்டால்... குடும்பத்துச் செலவுக்கு எங்கே கையேந்திறது... எண்டு சொல்லு பார்ப்பம்..."
 

"அம்மா... நீ... திருப்பித்திருப்பி எவ்வளவு கதைச்சாலும்... நான் குமரனை டிவோர்ஸ் பண்ணுறது பண்ணுறதுதான்.... சும்மா ஙொய்... ஙொய்... எண்டு வண்டு மாதிரிச்சத்தம் போட்டு என்ர பிள்ளைகளின்ட மனதையும் பழுதாக்கிப்போடாதை..."
 

அதைக்கேட்க அருளம்மாவுக்குச் சிரிப்பாக வந்தது.
 

இவர்களுக்குப் பிள்ளைகளைப்பற்றிய எண்ணம் கொஞ்சமாவது இருக்கா...? வெள்ளைக்கார நாட்டுக்கு வந்தவுடன், வெள்ளைக்காரர் மாதிரியெல்லோ நடக்க ஆசைப்படுகினம். பிள்ளைகள் எப்படிப்போனால் என்ன...? அதுகளின்ட மனம் என்னமாதிரி உடைஞ்சால் என்ன...? என்று. அவள் தன் கணவனிடம் எத்தனை அடி உதைகளை வாங்கியிருப்பாள். அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு, பிள்ளைகளை வளர்த்தபடியால்தானே இன்று ஒரு பொம்பிளையாக அவள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறாள் மகள் சுபா.
 

"சுபா... அண்டைக்கு நான் அப்பாவை டிவோர்ஸ் பண்ணியிருந்தால்... நீ இண்டைக்கு மரியாதையாக வாழமாட்டாய்."
 

"உனக்கு அப்பாவை டிவோர்ஸ் பண்ணப்பயம். ஆனால், எனக்கு அந்தப்பயம் இல்லை அம்மா...."
 

"ஆனால்... தற்கொலை செய்யப்பயம் இருக்கேல்லை. உங்களை நினைச்சுத்தான் இந்த சீவியத்தைக்கொண்டு இழுத்தனான் தெரியுமே..."
 

சொல்லும்போதே அருளம்மாவுக்கு கண்ணீர் பொங்கிக்கொண்டு வந்தது. ஓடிப்யோய் தன்னுடைய கட்டிலில் விழுந்தாள்.
 

படார் என்று கதவு சத்தத்துடன் சாத்துகின்ற ஒலி.
 
   
சுபாஷினி வேலைக்குப் போய்விட்டாள்.
 

பேரப்பிள்ளைகள் ஸ்கூலுக்கு வெளிக்கிட்டுப் போன பின்னர்... அருளம்மாவும் மகளுக்கு எத்தனையோ புத்திமதிகளை சொல்லிப் பார்த்துவிட்டாள்.
 

ஒவ்வொரு நாளும் இப்படித்தான் பிடிகொடுக்காமல் நழுவிப்போய் விடுகிறாள்.
 

சும்மாவா நழுவுகிறாள்... அவளது மனதை ஏதாவது ஒன்று சொல்லி... அறைந்து... ரத்தம் சிந்தும்படியாக வைத்துவிட்டுத்தான் நழுவுகிறாள்.
 

"கஞ்சப் புருஷனோட என்னால வாழ முடியாது "
 

எவ்வளவு சாதாரணமாகச் சொல்லிவிட்டுப்போய்விட்டாள்... அப்படியானால் அருளம்மாவும்... அவளை ஒத்த பெண்களும்... எவ்வளவு காரணங்களுக்காக புருஷன்மாரை விவாகரத்துச் செய்திருக்கவேணும். வெறும் பயத்திலா அவர்கள் டிவோர்ஸ் பண்ணாமல் இருந்தார்கள்....?
 
இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியோம் என்று அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, சத்தியம் பண்ணி ஏற்றுக்கொண்ட திருமண வாழ்க்கையை எவ்வளவு பயபக்தியுடன் ஒரு கண்ணாடிப் பாத்திரத்தைத் தலையில் கொண்டு நடப்பதைப்போன்ற அவதானத்துடன் நடந்துகொண்டார்கள். ஒருவர் குறையை இன்னொருவர் அனுசரித்து விட்டுக்கொடுத்து, தம் சந்தோஷத்தில் உருவான குழந்தைகளை அநாதைகளாக விட்டுவிடக்கூடாது என்றா... ஒரு பொறுப்புடன்... பரிவுடன்... ஆசையுடன்...
 

இவையெல்லாம் சுபா கூறுவது போல... பயத்துடன் நடக்கிற காரியங்களா...? என்ன பேச்சுப்பேசுகிறாள்...?
 

" வீடு கட்டித்தாறன் என்று சொல்லிப்போட்டு... அத்திவாரத்தைப் போட்டு ஏமாத்தினார் எல்லே...உன்ரை மாமனார். அப்படிப்பட்டவரின்ட மகளுக்குப் பக்கத்திலையும் படுக்காதை ராசா... உனக்கு நஞ்சு பருக்கிப் போடுவாள் "
 

அருளம்மாவின் தந்தை இறந்த பின்னர்,.. இனி அத்திவாரம் மேற்கொண்டு எழும்பாது என்று தெரிந்தவுடன்... மாமியார் தன் கணவனுக்கு எழுதிய கடிதத்தை... எத்தனை தரம் வாசித்து அருளம்மா அழுதிருப்பாள். பெண்ணே பெண்ணுக்கு எதிரியா...? ஒவ்வொரு முறையும் மாமியார் விடுதலைக்கு வந்து நிற்கும்பொழுது அவளது தூண்டுதலால் கணவனிடம் தான் வாங்கும் அடிகள்... அவர் பெண்டாட்டிதாசன் இல்லை என்பதை தாய்க்கு நிரூபிக்க... அவள்மேல் அவர் கோபத்துடன் வீசியெறியும் கோப்பைகள்...
 

எவ்வளவு பொறுமையுடன் கண்ணாடித் துண்டுகனைப் பொறுக்கியிருப்பாள் அருளம்மா.
 

மாமியார் ஊருக்குப் போனபĬ
Be the first to vote for this post!

Leave a comment