1
நோபெல் பரிசும், டிசம்பர் 10 ம், மனித உரிமைகள் தினமும்

நோபெல் பரிசு (Nobel Prize) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் பரிசு. 

இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது.


முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது.

1901 முதல் 2018 வரை 935 நபர்களுக்கு நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் நோபெலின் சொத்து மதிப்பிற்கேற்ப பரிசுத்தொகை வேறுபடும். 2017 ம் ஆண்டு வழங்கப்பட்ட பரிசுத்தொகை ஒவ்வொருவருக்கும் 110,000 அமெரிக்க டாலர் மதிப்பிலானது.

நோபெல் பரிசு இறப்பிற்கு பின் வழங்கப்படாது. பரிசு அறிவித்தபின் இறப்பு நிகழ்ந்தால் தரப்படும்.

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகிய 5 சிறப்புக்களுக்கு ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி பரிசு வழங்கப்படுகிறது.


பொருளியல் துறைக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.

பரிசு பெறும் ஒவ்வொருவருக்கும், பரிசுப் பணமும், தங்கப்பதக்கமும் பட்டயமும் வழங்கப்படும்.

2009 ல் அமைதிக்கான நோபெல் பரிசு பெறும் மெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா.


ஆல்ஃபிரட் நோபெல் பற்றிய சிறு வரலாற்றுக்குறிப்பு:

ஆல்ஃபிரட் நோபெல் 1833, அக்டோபர் 21 அன்று சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்தார்.


1894-ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்த போஃபர்சு இரும்பு மற்றும் எஃகு ஆலையை நோபெல் வாங்கி, அதனை பெரும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றினார். பலவித புகையற்ற ராணுவ வெடிபொருட்களுக்கு முன்னோடியான பாலிஸ்டிக்-கை இவர்தான் கண்டுபிடித்தார்.

1980 களில் காங்கிரசின் ராஜீவ் காந்தி அரசு கவிழ காரணமான போபோர்ஸ் ஆயுத ஊழல் நிறுவனமான அதே போபோர்ஸ் நிறுவனம் இதுதான்.


In 1986, the Government of India and Bofors signed a US$285 million contract for the supply of 410 155 mm field howitzers.[8] In 1987, Swedish Radio alleged that Bofors paid illegal commissions of Rs. 60 crores to top Indian politicians, members of the Congress party and key defence officials to seal the deal.[8] The scandal contributed to the defeat of Rajiv Gandhi government in the elections three years later. காண்க:

போபோர்ஸ் ஊழல் நாட்டுமக்களுக்கு தெரியவர காரணமான பத்திரிக்கையாளர்கள்:


 போபோர்ஸ் ஊழலின் கால அட்டவணை :இன்றைய மோடியின் ரஃபேல் ஊழல் போல 
அன்றைய ராஜீவ் காந்தியின் போபோர்ஸ் ஊழல்.ஆல்ப்ரட் நோபெல்: ஆயுத வியாபாரி என்ற அவரின் மறுபக்கம்:

ஆல்பிரட் நோபெலின் வருமானத்தில் பெரும்பகுதி அவரது 355 கண்டுபிடிப்புகளால் கிடைத்தது, அவற்றுள் முக்கியமானது டைனமைட் ஆகும். 1888-ல் ஒரு பிரெஞ்சு செய்தித்தாளில் "மரணத்தின் வியாபாரி இறப்பு" என்ற தனது இறப்புச் செய்தி கண்டு அதிர்ந்தார் ( "The merchant of death" is dead .)


ஆனால் அப்போது இறந்தவர் ஆல்ஃபிரடின் சகோதரரான லுட்விக் ஆவார். ஆனால் அச்செய்தி நோபலை துணுக்குறச் செய்தது, தான் இறந்தபிறகு எவ்வாறு நினைவில் வைக்கப்படுவோம் என்று தீவிரமான சிந்தனைக்கு ஆளானார். இதுவே அவரை தன்னுடைய உயிலை மாற்றி எழுதச் செய்தது.

63 வயதான போது டிசம்பர் 10,1895 அன்று இத்தாலியின் சான் ரெமோ மாளிகையில் ஆல்ஃபிரட் நோபெல் காலமானார்.

 நோபெல் பரிசு பற்றிய குறிப்புகள்:

தனது சொத்தில் 94 சதவிகிதத்தினை, (2018 மதிப்பின்படி 986,000 அமெரிக்க டாலர்கள்), ஐந்து நோபல் பரிசுகளை வழங்குவதற்காக எழுதி வைத்தார்.

1905-ஆம் ஆண்டு நார்வேயும் சுவீடனும் பிரிந்தன.
அதன் பின்னர், அமைதிக்கான நோபல் பரிசை அளிப்பதன் பொறுப்பு நார்வேயின் வசமும்
மற்ற பரிசுகளை வழங்கும் பொறுப்பு சுவீடன் வசமும் உள்ளது

1968-ஆம் ஆண்டு சுவீடன் நடுவண் வங்கியானது தனது 300-வது வருட கொண்டாட்டத்தின்போது, ஒரு பெரும் தொகையை நோபல் அறக்கட்டளைக்கு அளித்து நோபலின் பெயரில் ஒரு பரிசினை ஏற்படுத்த வைத்தது. அதற்கடுத்த வருடம் நோபல் நினைவு பொருளாதார அறிவியல் பரிசு வழங்கப்பட்டது.

வருடந்தோறும் நோபெல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று, அமைதிக்கான நோபெல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபெல் பரிசுகளும், சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தின் நகர அரங்கத்தில் (City Hall) வழங்கப்படுகின்றன.

பரிசு பெறுவோரின் சொற்பொழிவு, இந்நிகழ்ச்சியின் முன்தினம் நடை பெறுவது வழக்கம்.


அதே டிசம்பர் பத்தாம் நாள், நோர்வேயில் உள்ள ஒஸ்லோ நகரில், அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கும் விழா நடைபெறும். 

நோபல் பரிசினை இதுவரை மூன்று தமிழர் பெற்றுள்ளனர். 


மேலும் விபரங்கள் பெற: காண்க:

இந்தியாவில் 
மனித உரிமைக்கெதிரான குடியுரிமை மசோதா அரங்கேறும் அதே அவல நாளில் 
உலகளவில் 
இன்று மனித உரிமைகள் தினம். 
 
டிசம்பர் 10 இன்று மனித உரிமைகள் தினம்:


                                                                                   தொடர்ந்து தேடுவோம்...

Who Voted

Leave a comment