1
ஆனியன் alias வெங்காயம்
நண்பர் ஒருவர் முகநூலில், "வெங்காயம்" என்ற தலைப்பில் கவிதை எழுதச் சொன்னார். அந்த முயற்சியை இங்கே பகிர்கிறேன் !


ஆனியன் alias வெங்காயம்

உணவகத்தில் சாப்பிடவே அவா ! - சென்று
      உட்கார்ந்து கேட்டேனே 'ஆனியன் ரவா !'
மன அகத்துள் எதிர்பார்ப்பு ! ஆசை ! - இதோ
     கொண்டு வந்து வைத்துவிட்டார் தோசை !

உண்ணுகின்ற வேளையிலே வாழ்வின் - ஒரு
     தத்துவத்தை உணர்ந்தேனே நானும் !
மண்ணுலக வாழ்க்கைஒரு "தேடலே" ! - இதோ
     தேடுகிறேன் 'ஆனியனை' தோசையிலே !

Who Voted

Leave a comment