1
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence(AI))

மாற்றம் என்பது வாழ்க்கைநியதியாகும் அதனடிப்படையில் கடந்த காலத்தை அல்லது நிகழ்காலத்தை மட்டுமே பார்ப்பவர்கள் எதிர்காலத்தை இழப்பது உறுதி என ஜான் எஃப். கென்னடி கூறியுள்ளார் . நாம் வாழும் தற்போதைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளின் சகாப்தத்தில், மனிதன் தனது நுண்ணறிவின் வாயிலான கண்டுபிடிப்புகளினால் அவனது வாழ்க்கைத் தரத்தையும் வசதியையும் மேம்படுத்த புதிய இயந்திரங்கள், கணினிகள் , பிற தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்கி வருகின்றான். மனிதனின் அவ்வாறான கண்டுபிடிப்புகளில் ஒன்றே செயற்கை நுண்ணறிவு என்பதாகும். இந்த AIஐ பற்றி இப்போது காண்போம்.

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அறிவார்ந்த இயந்திரங்களை உருவாக்குவதற்காக கணினியை பின்தொடர்வதைத் தவிர வேறொன்றுமில்லை, இது நமது அனுபவத்தையும் திறன்களையும் அதிகரிக்கவும் வளப்படுத்தவும் மனித பகுத்தறிவைப் பயன்படுத்திகொள்கின்றது.இந்த AI இன் இயந்திரங்களை புதிய உளவுத்துறை எனக் கூறலாம். இந்த AI ஆனது நுண்ணறிவு பயன்பாடுகளையும் அது செயல்படுவதற்கானAI இயங்குதளத்தையும் உள்ளடக்கியதாகும். இணக்க தேவைகளுக்கு AI உதவிகரமாக விளங்குகின்றது. மேலும் AI ஆய்வகம் AI மாதிரி செயல்பாடுகள் ஆகியவற்றை தரவு செயலாக்கத்திற்கும் இலக்குகளை அடையவும் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன. ஆழ்கற்றல், இயந்திர கற்றல், இயற்கை மொழி செயலாக்கம், நரம்பியல் வலைபின்னல், கணினியின்முன்னோக்கு, முன்கூட்டிய வழிமுறைகளின் பயன்பாடு , அறிவாற்றலுடைய கணினி ஆகியவை AI ஐப் பொறுத்தவரை மிகமுக்கிய உறுப்புகளாகும்.

AI ஆனது அதிக துல்லியத்துடன் கேட்கும், பார்க்கும், பகுத்தறிந்திடும் திறன்களை கொண்டதாகும். மென்பொருட்களை உருவாக்குவது சாதனங்களை மேம்படுத்துவது, அவற்றை மலிவு விலையில் கிடைக்கசெய்வது ஆகியவற்றின் வாயிலாக மக்கள் தங்களுடைய அன்றாட பணிகளைச் செய்வதற்கும், அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கான கருவிகளைத் தனிப்பயனாக்குவதற்குமான சுதந்திரத்தைப் பெறுகிறார்கள். , பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கிடையில் சிறந்த தகவல்தொடர்பினை உருவாக்கி பராமரித்திடஇந்தAIஉதவுகின்றது. அதுமட்டுமல்லாது வாடிக்கையாளர்களின் தனிப்பயன் பேச்சு மாதிரிகளையம் மைக்ரோசாஃப்ட்டில் மொழிபெயர்ப்பாளரை மேம்படுத்துவதற்கு இந்தAI உதவுகின்றது சர்வதேச பரிவர்த்தனைகளுக்கான நிகழ்நேர தலைப்புகளின் துல்லியமாக உலக அளவிலான ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கு இந்தAI ஆனது மிகமுக்கிய பங்காற்றுகின்றது. ஒரு நிறுவனத்தில்பயனாளர்களின் முகஅங்கீகார மறுசீரமைப்பு, குரல்அங்கீகார மறுசீரமைப்பு தொடர்பாக AI ஐப் பயன்படுத்திகொள்ளலாம். மேலும் இந்த AI ஆனது ஒரு வகையில் தானியங்கி செயல்களில் புதியதொருபுரட்சியாக விளங்குகின்றது

இது இயந்திர கற்பித்தல் பற்றிய கருத்துகளை ஆராய்வதற்கு உதவுகின்றது அதைவிட மென்பொருள் உருவாக்குநர்கள் அல்லது AI நிபுணத்துவத்துடன் கூடிய வல்லுநர்கள் வணிகநடவடிக்கைகளின் நன்மைக்காக ஒரு அறிவார்ந்த அமைப்புக்கு தேவையான மிகவும் சுருக்கமான கருத்தமைகளை வழங்கஇது அனுமதிக்கின்றது. வாடிக்கையாளராகிய நம்முடைய கேள்விக்கு வெளிப்படையாகமிகச்சரியான பதிலை தொடர்புடைய ஆவணங்களிலிருந்து ஒரு பத்தியைப் பிரித்தெடுக்கவும் அதனை இயந்திரமானது வாசிப்பதை புரிந்துகொள்ளக் கூடிய திறனையும்இது கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, “நான் எனது நாயை வேலைக்கு அழைத்துகொண்டு வரலாமா?” என்று ஒரு ஊழியர் கேட்டால், உடன் மைக்ரோசாஃப்ட் தேடல் (AI கருவி)ஆனது மனிதவள கையேட்டில் இருந்து பொருத்தமான பதிவிற்கான பத்தியைப் பிரித்தெடுத்து அதை ஒரு தேடல் முடிவாக வழங்கும். இந்த மைக்ரோசாஃப்ட் தேடல்கருவி, கூகிள் தேடல்கருவி ஆகியவை AI இன் அடிப்படையில் செயல்படுபவைகளாகும். இந்த AI இன் வாயிலாக மீண்டும் மீண்டும் செய்யப்படும் பணிகள்மிகச்சிறப்பாக செயற்படுத்தப் படுகின்றன. இயந்திர கற்றல் என்பது AI இன் ஒரு கிளை அமைவாகும், இது முன்பே கட்டமைக்கப்பட்ட குறிமுறைவரிகள் எதுவும் இல்லாமல் இயந்திரங்களுக்கு ஒரு பணியைக் கற்றுக் கொள்ளும் திறனை வழங்குவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த இலக்குகளை அடைய இயந்திரங்கள் தங்கள் மூலோபாயத்தை கற்றுக் கொள்கின்றன. ஆழ்கற்றலானது பெரும்பாலும் நியூரான்கள் அல்லது மூளை செல்களைப் பின்பற்றும் பலவகை நரம்பியல் வலைபின்னல்களை சாத்தியமாக்கு-கின்றது.

சாட்பாட்கள் AI இன் பயன்பாட்டிற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இந்த சாட்பாட்கள் வாடிக்கையாளர்களின் தரவுகளை சேகரிக்கும் பணியை செயற்படுத்திடு-கின்றன, மிகமுக்கியமாக இவைதரவுகளின் குவியல்களை மட்டுமல்லாது உற்பத்தி துறையையும் நிர்வகிக்க இது உதவுகின்றன. மேலும் காப்பீடு, வங்கி, உடல்நலம், அரசு சேவைகள் போன்ற பல்வேறு துறைகளில் இந்த சாட்பாட்கள் உதவுகின்றன. ஒரு சாட் பாட் என்பது கணினியின் உரைவாயிலான கட்டளை அல்லது குரலொலிவாயிலான கட்டளை அல்லது இவ்விரண்டும் சேர்ந்து மனித உரையாடல்களை உருவகப்படுத்தும் ஒரு கணினி நிரலாகும். சாட்டர்பாட் என்பது சுருக்கமா் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அம்சமாகும், இது எந்த பெரிய செய்தி பயன்பாடுகளிலும் உட்பொதிக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம்

இந்த AI எவ்வாறு இயங்குகிறது? : AI செயற்படும் முறைகள்(மோடுஸ் ஓபராண்டி):

AI இன் கருத்து தொழில்நுட்ப அம்சங்களுடன் ஏற்றப்பட்டிருப்பதால் அதனைபற்றிய தொழில்நுட்ப வாசகங்களை குறிப்பிடுவது அவசியம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இதன் செயல்முறையைப் புரிந்து கொள்ளலாம்:

• வரைகலை செயலாக்க அலகுகள் (GPU): இவை AI இன் முக்கிய செயல்பாட்டாளர்-களாகும், இவை மில்லியன் கணக்கான தரவுகளையும் கணக்கீடுகளையும் மிகவிரைவாக செயலாக்குவதற்கு தேவையான மிகப்பெரிய கணினி சக்தியை வழங்குகின்றன.

• பொருட்களுக்கான இணையம்(IOT):, இது இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பொருட்களின் அல்லது சாதனங்களின் ஒட்டுமொத்த வலைபின்னலாகும்.இந்த ஐஓட்டிஆனது வரும் ஆண்டுகளில் 100 பில்லியனுக்கும் அதிகமான பொருட்களை அல்லது சாதனங்களை இணைக்கவிருக்கின்றன என கணிக்கப்பட்டுள்ளது.

.நுண்ணறிவு தரவு செயலாக்கம் இது தரவுகளின் விரைவான பல-நிலை பகுப்பாய்விற்கு மேம்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி இந்த நுண்ணறிவு தரவுகளின் செயலாக்கம் மேம்படுத்தப்படுகிறது. அரிய நிகழ்வுகள், புரிந்துகொள்ளும் அமைப்புகள் , தனித்துவமான சூழ்நிலைகள் ஆகியவற்றை கணிக்க இதுவே முதன்மை தீர்வாக அமைகின்றது.

.பயன்பாட்டு செயலாக்க இடைமுகங்கள்(API) இவை களை ஒருங்கிணைப்பதன் மூலம், செயற்கை நுண்ணறிவின் அம்சங்களை ஏற்கனவே உள்ள மென்பொருளில்உட் செருகலாம், அதன் இயல்பான செயல்பாட்டை AI உடன் அதிகரிக்கலாம்.ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார்கள், மைக்ரோசாஃப்ட்நிறுவனத்தின் தேடுபொறி, கூகிள் நிறுவனத்தின் தேடுபொறி இயந்திரமனிதன் ஆகியவை AI இன் சிறந்து எடுத்துக்-காட்டுகளாகும்

இந்தசெயற்கை நுன்னறிவின் பயன் கள்

தகவல் / தரவை அறிவாக மாற்றுவதன் அடிப்படையில் சிக்கலை விரைவாக தீர்வுசெய்வதன் வாயிலாக ஒரு நிறுவனத்தில் உற்பத்தித்திறனை யும் செயல்பாட்டு செ&%2

Leave a comment