1
உலகின் 30 நாடுகள் அழிக்க விரும்பிய தமிழீழ விடுதலைப்போராட்டமும் தமிழ்த்தேசியமும்.


நவம்பர் 26 தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்த நாள் 
நவம்பர் 27 மாவீரர் தினம்.
மே 18 2009 தமிழர் இன எழுச்சி நாள்.


தமிழ்த்தேசியம்: ஒரு குறுகிய கண்ணோட்டம் அல்ல.
தமிழ்த்தேசியம்: ஒரு தனிப்பட்ட இனத்தின் தேசியம் அல்ல.
தமிழ்த்தேசியம்: தமிழ்நாட்டின் பரப்பளவுக்குள் சுருக்கப்பட்ட எல்லை அல்ல.
தமிழ்த்தேசியம்: மொழி வழி தேசிய இனம் மட்டுமல்ல.
தமிழ்த்தேசியம்: அந்நிய மொழிவழி இனங்களுக்கு எதிரானது அல்ல.
தமிழ்த்தேசியம்: ஆரியம் என்பதற்கு எதிர்ப்பதம் அல்ல.
தமிழ்த்தேசியம்: சூத்திரர்களின், அசுரர்களின், தலித்துகளின் பூமி மட்டுமல்ல.
தமிழ்த்தேசியம்: மண்ணின் இயல், இசை, கலைவடிவங்களின் ஒட்டுமொத்த பரிமாணம் மட்டுமல்ல.
தமிழ்த்தேசியம்: மதங்களின் பிறப்பிடமுமல்ல, மதங்களின் மறுப்பிடமுமல்ல.
தமிழ்த்தேசியம்: கடல்சார் வணிகம், கப்பற்படை மேலாண்மை என்பதன் வரலாறல்ல.
தமிழ்த்தேசியம்: மா மன்னர்களின் வரலாறு, கட்டிடங்களின் உயர் தொழில் நுட்ப தகவல் குறிப்புகள் மட்டுமல்ல.
தமிழ்த்தேசியம்: சென்னை முதல் குமரி வரையோ, திருவேங்கடம் வரையோ, பாரத நாடு பைந்தமிழர் நாடு என இந்திய தேசியம் முழுவதுமோ குறிக்கக்கூடிய பண்பாட்டு குறியீடு மட்டுமல்ல.
தமிழ்த்தேசியம்: ஜல்லிக்கட்டு போராட்டம் எவ்வாறு வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமாக  இல்லாது ஒட்டுமொத்த தமிழினத்தின் விடுதலைக்கான போரின் அடையாளமாய் இருந்ததோ 
அதுபோலவே 

தமிழ்த்தேசியம்: 
இன அளவிலான, தேசிய அளவிலான, சர்வதேச அளவிலான ஒட்டுமொத்த மனித குல விடுதலைக்கான பெரும்போராட்டத்தின் அடங்க மறுக்கும் போர்க்குரல்.இந்தப் போராட்டத்தின் அடிப்படையில் 3 வகை போராட்டங்கள்:

1. சர்வதேசத்தின் பொருளாதார ஆக்கிரமிப்புக்கு எதிராக
2. "இந்திய தேசிய"த்தின் பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக
3. திராவிட துரோக ஆக்கிரமிப்புக்கு எதிராக


ஒரே வகை வரி அமைப்பு
ஒரே வகை மானிய ஒழிப்பு
  ஒரே மின் வரி உயர்வு
நாடு முழுவதும் ஒரே மொழி 
நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் 
நாடு முழுவதும் ஒரே வகை நீட் வகை கல்வி முறை
ஒரே வகை தனியார் மயப்படுத்தப்பட்ட பொருளாதாரம் 
ஒரே வகை மின்னணு ஏமாற்று தேர்தல் முறை  
நாடு முழுவதும் ஒரே ஆரிய இன ஆட்சி

இதுக்கு பெரும் தடையா இருக்கிற ஒரே இனம்
தமிழினம் 
தாக்குடான்னு மாத்தி மாத்தி தாக்குறான்...
 
தமிழர்களின் அடங்கமறுக்கும் இனவெழுச்சி 
50 ஆண்டுகால திராவிட கட்சிகளால் மழுங்கடிக்கப்பட்ட நிலையில் 
புத்தெழுச்சி கண்ட தமிழீழ விடுதலைப்போராட்டம் 
தமிழர்களின் போராட்ட உணர்வை மீண்டும் தட்டி எழுப்பி இருக்கிறது,
 
விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறிட “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை, வாழ்ந்ததும் இல்லை, போராடியதும் இல்லை.

உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை!
உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் தங்களது படை நடவடிக்கைகளுக்கு பெயர் சூட்டி அழைத்ததில்லை!
உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை!
உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் நாப்பதாயிரத்திற்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை!
உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையத்தளங்கள் இருந்ததில்லை!
விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால் எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது? அது எப்படி சாத்தியாமானது?
அவர்கள் தீவிரவாதிகள் என்றால், எப்படி மக்களின் பெரும்பலம் அவர்களுக்குக் கிடைத்தது ?

பிறகு ஏன் விடுதலைப் புலிகளை 
முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து 
துரோகத்தனமாய் 
அழிக்க வந்தன ?

அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம்! அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளைக் கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே! அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கான தளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள்? அவர்கள் தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்று வரையும் விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை!

இன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் “தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன்
அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.

அந்த உள் கட்டமைப்புக்கள் பின்வருமாறு:

* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.
* தமிழீழ வைப்பகம்.
* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
* கிராமிய அபிவிருத்தி வங்கி.
* அனைத்துலகச் செயலகம்.
* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கானஇ தொடர்பாடல் சேவை மையம்)
* சுங்க வரித்துறை.
* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.
* அரசறிவியற் கல்லூரி.
* வன வளத்துறை.
* தமிழீழ நிதித்துறை.
* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.
* கலை பண்பாட்டுக்கழகம்.
* மருத்துவப் பிரிவு.
* திலீபன் சிறப்பு மருத்துவமனை.
* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
* சுகாதாரப் பிரிவு.
* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.
* நிர்வாக சேவை.
* அன

Who Voted

Leave a comment