1
பேண்டஸி வரைபடம் உருவாக்கி எனும்கருவி ஒரு அறிமுகம்

FMG என சுருக்கமாக அழைக்கபெறும் பேண்டஸி வரைபட உருவாக்கி (Fantasy Map Generator ) என்பது ஒரு கட்டணமற்ற இணைய கருவியாகும், இது நடைமுறை ரீதியாகவும். தனிப்பயனாக்கக்கூடியதாகவும உலக வரைபடங்களையும் ,நாடுகளின் வரைபடங்களையும் நாமே உருவாக்குவதற்கு உதவுகின்றது. இதில் தானாக உருவாகிய வரைபடங்களைப் பயன்படுத்திகொள்ளலாம் அல்லது புதிதாக நாமே முயன்று புதிய வரைபடத்தைகூட உருவாக்கலாம்

இந்த பேண்டஸி வரைபட உருவாக்கிஎனும் கருவியிலுள்ள 1180 க்கும் மேற்பட்ட வெவ்வேறு படங்களைப் பயன்படுத்தி நம்முடைய சொந்த வடிவமைப்பில் முழு உலகையும் உருவாக்க நம்மை அனுமதிக்கின்றது. அதாவது காடுகள், மலைகள் , நிலப்பரப்பு களுக்கான இயற்கை பகுதிகள் ,கடல்கள் ஆகியவற்றை இழுத்துசென்று விடுவதன் வாயிலாக பின்னர் அதன் அளவை தேவையான வாறு சரிசெய்து மேம்படுத்தி கொள்ளலாம்

இவை அனைத்தையும் செய்வதற்கான ஒருசில வழிமுறைகள் மட்டும்பின்வருமாறு:

வரைபடத்தில் ஒரு பகுதியைச் சேர்ப்பது: மாற்ற விரும்பும் எந்தவொரு வரைபடத் துண்டையும் தெரிவுசெய்க உடன் நாம் தெரிவுசெய்து பகுதிநீலவண்ணத்தில் மேம்படுத்தி காண்பிக்கும் தேர்வுசெய் பட்டியிலிருந்து (வெளிப்புற மூலைகள், உள் மூலைகள் போன்றவை) ஏதேனும் ஒரு பகுதியைக் தெரிவுசெய்து சொடுக்குக , தொடர்ந்து சதுரமாக மேம்படுத்தப்பட்ட பகுதியின். கீழே உள்ள பகுதிகளை இழுத்துசென்றுவிடுக

சுழற்றிஅமைத்தல்: சுழற்ற விரும்பும் வரைபடத்தில் உள்ள இழுத்து செல்லக்கக்கூடிய துண்டுகள் உட்பட எந்த ஒரு துண்டினையும் தெரிவுசெய்து சொடுக்குக உடன் அது நீல வண்ணத்தில் மேம்படுத்தி காண்பிக்கும். பின்னர் “rotate 90”, “rotate 180”, “rotate 270”, “reset”ஆகிய சுழற்றும் பொத்தான்களில் நாம் விரும்பும் ஒன்றைக் தெரிவுசெய்து சொடுக்குக .

பிரதிபலித்தல்: ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்தபின்னர் mirrorஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் அதை பிரதிபலிக்க செய்யமுடியும்.

Toggle gridஎனும் பொத்தானை சொடுக்குவதன் மூலம் வரைபடத்தின் சிறந்த காட்சியைப் கொண்டுவந்து காணலாம் அந்த காட்சியை மறைக்கலாம்.

மீட்டமைத்தல்(Resetting ): முழு வரைபடத்தையும் மீட்டமைக்க, reset map எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. இது இழுத்துசெல்லக்கூடிய பகுதியை மீட்டமைக்காது, அதற்காக reset dragsஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக . ஒரு தனிப்பட்ட சதுரத்தை மீண்டும் நிலங்கள் மலைகள் கடல்கள் ஆகியவற்றாலான துண்டுகளாக்குவதற்கு அதை தெரிவுசெய்து சொடுக்குக ,உடன்அந்தபகுதியை நீல நிறமாக மேம்படுத்திகாண்பிகும், மேலும் reset piece எனும் பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்குக

பெயர்பட்டியைச் சேர்த்திட: வரைபடத்தில் ஒரு பெயர்பட்டியைச் சேர்க்க Add label எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக . பின்னர் தேவையான பெயர்பட்டியை இழுத்து செல்வதன்வாயிலாக அதனை, மறுஅளவாக்கம்செய்து அதில் பெயர் விளக்கம் போன்ற நாம் விரும்பும் எதையும் தட்டச்சு செய்யலாம்.

சீரற்ற வரைபடம்: ஒரு தருணத்தில் சீரற்ற வரைபடத்தை உருவாக்க வரைபடத்திற்கு கீழே உள்ள Randomஎனும் பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்கு.

Tuning – வரைபட வார்ப்புரு நாடுகளின் விவரம் மாநிலங்களின் விவரம் போன்றவைகளை மாற்றி, தேவைகளுக்கு ஏற்றவாறு புதிய வரைபடத்தை உருவாக்கலாம்

தனிப்பயனாக்கம் – கருவிகள் தாவலைத் திறந்து, கிடைக்கக்கூடிய எடிட்டர்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வரைபடத்தை விரும்பிய வழியில் மாற்றலாம்

நம்மிடம் ஏற்கனவே ஒரு வரைபடப் படம் இருந்தால், அதை ஒரு ஜெனரேட்டரில் மீண்டும் உருவாக்க விரும்பினால், பட மாற்றிக்கானபொத்தானை சொடுக்குதல்செய்து திறந்து, படத்தைபதிவேற்றுக மாற்றத்தை வரைபடமாக மாற்றுக. பின்னர் வழங்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி வரைபடத்தைத் திருத்தம்செய்க

– புதிதாக ஒரு வரைபடத்தை வரைய தூரிகைகளைப் பயன்படுத்துக. இதற்கு நிறைய நேரம் ஆகலாம், எனவே ஒரு அடிப்படை நிலப்பரப்பைப் பெற கட்டுப்படுத்தப்பட்ட தலைமுறை அணுகுமுறையைப் பின்பற்றும்படி பரிந்துரைக்கப்படுகின்றது, இங்கு ஒரு சில செயல்முறைகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன மேலும் விவரங்களுக்கு http://feedthemultiverse.com/free-fantasy-map-generators-assorted-links/ எனும் இணையமுகவரிக்கு செல்க

Leave a comment