1
MsOffice Outlook எனும்மின்னஞ்சல் பயன்பாட்டிற்கு மாற்றானகட்டற்ற பயன்பாடுகள்

பெரும்பாலான வியாபார நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இடையே அலுவலகம் தொடர்பான செய்திகளை பரிமாறி கொள்வதற்காக Ms Office Outlook எனும் தனியுடமை பயன்பாட்டினை பயன்டுத்தி கொண்டுள்ளன இந்த பயன்பாடானது ஊழியர்கள் தங்களுடைய அலுவலகம் தொடர்பான தகவல்களை பரிமாறி கொள்வதற்கு பேருதவியாய் விளங்குகின்றது ஆயினும் அதற்குமாற்றாக கட்டற்ற பயன்பாடுகள் கூட அதேவசதி வாய்ப்புகளை வழங்குகின்றன அவை பின்வருமாறு

1.Thunderbird மொஸில்லா நிறுவனத்தின் இந்த பயன்பாடு கட்டற்றது கட்டணமற்றது விண்டோ லினக்ஸ் மேக் போன்ற அனைத்து இயக்கமுறைமைகளிலும்செயல்படும் திறன்கொண்டது Creative Commons license எனும் பொதுஅனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது இதில் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை துவங்கி பராமரித்து கொள்ளலாம் நாம் மற்றவர்களுக்கு அனுப்பிடும் மின்னஞ்சல்களில் நம்முடைய கையெழுத்தினை தானாகவே உருவாகிடுமாறு செய்து கொள்ளலாம் பழைய மின்னஞ்சல்கள் ஏதேனும் உள்ளதாவென தேடிபிடித்திடலாம் இதில் நிகழ்வு நேர விவாதங்களையும் செயல்படுத்திடமுடியும் RSS/Atom feed ஆகியவற்றை ஆதரிக்கூடியது மட்டுமல்லாமல் calendar , PGP, integration போன்ற வசதிகளை கூடுதல் இணைப்பாககூட இதில் இணைத்து கொள்ளமுடியும் அதைவிட இதனை கையடக்க பயன்பாடாக கூட பயன்படுத்தி கொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்துபயன்படுத்தி கொள்வதற்காகவும் http://portableapps.com/apps/internet/thunderbird_portable எனும் இணையமுகவரிக்கு செல்க

2.K-9 Mail இந்த பயன்பாடு கட்டற்றது கட்டணமற்றது அனைத்து இயக்கமுறைமை களிலும் செயல்படும் திறன்கொண்டது இதுவும்Creative Commons license எனும் பொது அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது நாம் மற்றவர்களுக்கு அனுப்பிடும் மின்னஞ்சல்களில் நம்முடைய கையெழுத்தினை தானாகவே கொண்டுவரும்வசதி கொண்டது Bcc-to-self, return-address ,message flagging, IMAP நீக்கம் செய்தல், இணைப்புகளை சேமித்தல் போன்ற பல்வேறு வசதி வாய்ப்புகளை கொண்டது கணினி மட்டுமல்லாது மடிக்கணினி கைக்கணினி ஆண்ட்ராய்டு போன்ற கைபேசி சாதனங்களின் வாயிலாக கூட மின்னஞ்சல்செய்திகளை பரிமாறி கொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்துபயன்படுத்தி கொள்வதற்காகவும் https://k9mail.github.io எனும் இணையமுகவரிக்கு செல்க

3.Evolution என்பது கட்டற்றது கட்டணமற்றது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டது இதுமின்னஞ்சல்களை GnuPG S/MIME ஆகியவற்றை கொண்டு மறையாக்கம் செய்து பரிமாறிகொள்ளும் வசதியைஅளிக்கின்றது மின்னஞ்சல்களை திரும்ப பெறுவதற்காக POP , IMAP ஆகிய ஒழுங்குமுறைகளை பின்பற்றிடுகின்றது SSL, TLS , STARTTLS ஆகிய பாதுகாப்பான வழிமுறைகளை கொண்டு வலைபின்னல் இணைப்பினை பராமரிக்கின்றது SpamAssassin ,Bogofilterஆகிய குப்பை மின்னஞ்சல் வடிகட்டிடும் வசதிகொண்டதுமேலும் நமக்கு தேவையான பல்வேறு வசதி வாய்ப்புகளை இதில் கூடுதல் இணைப்பாக செய்து பயன்படுத்தி கொள்ள முடியும்.மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்துபயன்படுத்தி கொள்வதற்காகவும் https://wiki.gnome.og/Apps/Evolution எனும் இணையமுகவரிக்கு செல்க

4.Pantheon Mail என்பது கட்டற்றது கட்டணமற்றது அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டது Gmail, Yahoo! Mail, Outlook, IMAP ஆகியவற்றை ஆதரிக்க-கூடியது புதிய மின்னஞ்சல்ஏதேனும் வந்தால் நமக்கு தகவல் அளிக்ககூடியது மிகவிரைவாக புதிய கணக்குகளை உருவாக்கி கட்டமைத்து கொள்ள உதவுகின்றது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்துபயன்படுத்தி கொள்வதற்காகவும்https://launchpad.net/pantheon-mail எனும் இணையமுகவரிக்கு செல்க

5.Kube என்பது மிககுறைந்தவளங்களைகொண்டு சமீபத்திய புதிய பல்வேறு வசதிவாய்ப்புகளையும் வழங்குகின்ற கட்டற்ற கட்டணமற்ற அனைத்து இயக்க-முறைமைகளிலும் செயல்படும்திறன்கொண்ட தொரு மின்னஞ்சல் பயன்பாடாகும் இதிலுள்ள contacts, calendars, notes, todo’s ஆகியபல்வேறு வசதி வாய்ப்புகளை இதில் கூடுதல் இணைப்பாக செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்.மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்துபயன்படுத்தி கொள்வதற்காகவும்https://kube-project.com/ எனும் இணையமுகவரிக்கு செல்க

6.Sylpheed என்பது குறைந்த கொள்ளவே கொண்ட பயன்படுத்த எளிதான கட்டற்ற கட்டணமற்ற GNU GPL எனும் பொதுஅனுமதியின் படி வெளியிடப்பட்ட அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்ட தொரு மற்றொரு மின்னஞ்சல் பயன்பாடாகும்.இதனை பற்றி மேலும் விவரங்களைஅறிந்து கொள்வதற்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வதற்காகவும்http://sylpheed.sraoss.jp/en/ எனும் இணையமுகவரிக்கு செல்க

Leave a comment