1
Free Conference எனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாட்டினை கொண்டுகானொளி காட்சி வாயிலான கூட்டத்தை எளிதாக நடத்தலாம்

வெகுதூரத்திலுள்ள தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் குறிப்பிட்ட கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை யென்றாலும் தான் இருந்தஇடத்திலிருந்தவாறே தன்னுடைய கைபேசி அல்லது கணினியில் இணையத்தின் வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டு மற்றவர்களுடன் விவாதித்து முக்கிய முடிவுகளை எடுத்திடமுடியும்இதற்காகவென தனியாக எந்தவொரு பயன்பாட்டினையும் கணினியில் பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து கொள்ளத் தேவையில்லை நாம் விரும்பும் முக்கிய கூட்டங்களில் தூரத்திலிருந்த-வாறே கலந்து கொண்டு நேரடியாக விவாதங்களில் பங்கேற்று தம்முடைய கருத்துகளை கூறலாம் அதற்காக இந்த https://www.freeconference.com/sign-up/ எனும் தளத்திற்குள்நம்முடைய பெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொற்களை கொண்டு உள்நுழைசெய்து தேவையான படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதுமானதாகும் உடன் நம்மைஇணையத்தின் வாயிலாக கூட்ட அரங்கிற்கு அழைத்துசெல்லும் அதில்வலதுபுறமுள்ள பட்டியலிற்கான பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுக தொடர்ந்து கூட்டம் துவங்கிடும் விவரங்களை நகலெடுத்து நாம் கூட்டத்தில்கலந்து கொள்ளும் நம்முடைய நண்பர்கள் கூட்ட உறுப்பினர்களுக்கு கூட்டம் துவங்கிடும் விவரங்களை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைத்திடுக அவர்கள் நம்முடைய மின்னஞ்சல்அறிவிப்பில் இடம்பெற்றுள்ள இணைப்பினை சொடுக்குதல்செய்து கூகுளின் குரோம் இணையஉலாவியின் வாயிலாக பின்பற்றினால்போதும் பின்னர் start nowஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் கூட்டம் துவங்கிவிடும் இணையத்தின் வாயிலானகூட்டரங்கில் சென்றவுடன் திரையின் மேலேயுள்ள video எனும்உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் நம்முடைய உருவம்திரையில் தோன்றிடும் உடன் வழக்கமான கூட்டத்தில் நேரடியாக கலந்து கொள்வதை போன்று நேருக்குநேர் விவாதத்தை துவங்கிடலாம் இது விண்டோ லினக்ஸ் மேக்ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் https://support.freeconference.com/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Leave a comment