1
பக்கம் பக்கமாககுறிமுறைவரிகளை எழுதாமலேயே PWCT ஐ கொண்டு நமக்கு தேவையானபயன்பாட்டினை நாமே உருவாக்கிகொள்ளமுடியும்

நமக்கு தேவையான பயன்பாட்டினை நாம் உருவாக்கவேண்டுமெனில் ஏதாவதொரு கணினிமொழியின் அடிப்படையில் பக்கம்பக்கமாக குறிமுறைவரிகளை கொண்டுதான் உருவாக்கமுடியும் என்றநிலை PWCT என்பதை அறிமுகபடுத்தியபின் அறவே மறைந்துவிட்டது அதிலும் அனுபவம் வாய்ந்த நிரலாளர்களால்தான் நமக்கு தேவையான பயன்பாட்டினை உருவாக்கி வழங்கமுடியும் என்ற நிலையும் தற்போது மாறவிருக்கின்றது கணினியை பற்றியஅடிப்படை செயல்முறைகள் மட்டும் தெரிந்த எந்தவொரு நபரும் தனக்கு தேவையான பயன்பாடுகளை PWCT உதவியுடன் தானே மிகஎளிதாக உருவாக்கி கொள்ளமுடியும் இது GNU G P L எனும் பொதுஅனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டதொரு கட்டற்ற கட்டணமற்ற கணினி மொழியாகும் இது C, Python, C#.NET போன்ற பல்வேறு கணினிமொழிகளை ஆதரிக்கின்றது இது GUI எனும் வரைகலைபயனாளர் இடைமுகப்பு(Graphic User Interface) என்பதன் அடிப்படையில் செயல்படுகின்றது இது Procedural Programming , Object Oriented Programming , Event Driven Programming ,Super Server programming ஆகிய அனைத்தும் இணைந்த வொரு நிரல்தொடர்மொழியாகும் இதனைகொண்டு அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்க பலதளங்களிலும் செயல்படும் பயன்பாட்டினை அதிலும் இயக்கநேர பயன்பாட்டினைகூட மிகஎளிதாக உருவாக்கி கொள்ள முடியும்

புதிய கருத்தமைவுகளுடன் புதிய நிரல்தொடர் எழுதவிரும்பும் எந்தவொரு நபரும் இந்த PWCT ஐ பயன்படுத்தி கொள்வது மிகச்சிறந்த அனுபவமாக அமையும் Not Case Sensitive. Not Tab Sensitive. Not Space Sensitive. Not Line Sensitive ஆகிய எந்தவொரு பாதிப்பும் இதில் உருவாகாது எந்தவொரு கணினிமொழியிலும் மூலக்குறிமுறைவரிகளைஎழுதி இதில் சேர்த்து கொள்ளலாம் இது ஒரு பொதுபயன்பாட்டு காட்சி நிரல் தொடர் மொழியாகும் மேலும் விவரங்களுக்கு http://doublesvsoop.sourceforge.net/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Leave a comment