1
திரைப்படங்களை காண்பதற்கான கட்டற்ற கட்டணமற்ற இணையதளங்கள்

தற்போது பெரும்பாலானவர்கள் திரைப்படங்களை தங்களுடைய கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளாமலேயே காணவேண்டும் என விரும்புவார்கள் அவ்வாறானவர்களுக்காக உதவகாத்திருப்பவைகள்தான் பின்வரும் கட்டற்ற கட்டணமற்ற இணையதளங்களாகும்

1.Rainierland Movies இந்த இணையதளத்தில் கட்டணமில்லாமல் நாம் விரும்பும் திரைப்படங்களை எளிதாக காணமுடியும் இதனை பார்வையாளர்கள் மிகஎளிய இடைமுகத்துடன் பயன்படுத்தி கொள்ளமுடியும் இதன்முகப்பு திரையில் பல்வேறு HD movie channels பட்டியல்களாக இருக்கின்றன அவைகளுள் நமக்குவிருப்பமானதை மட்டும் தெரிவுசெய்து கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளாமலேயே நேரடியாக திரைப்படங்களை காணலாம்

2.GoMovies என்பதுமற்றொரு சிறந்த கட்டணமல்லாத நாம் விரும்பும் திரைப்படங்களை எளிதாக காண உதவிடும் இணையதளமாகும். தற்போது இந்த இணையதள பக்கத்தை மிகமேம்பட்ட சேவைகளுடன் பார்வையாளர்களை கவரும் வண்ணம் மிகச்சிறப்பாக மேம்படுத்தி நிகழ்நிலை படுத்தியுள்ளனர் இதில் ஏராளமானதிரைப்படங்களை சேகரித்து அவைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது நிகழ்நிலை படுத்தி தொகுத்துவைத்துள்ளனர். இதில் திரைபபடங்களை காணும் பார்வையாளர்களுக்கு எந்தவித தொந்திரவும் இல்லாமல் மிகசிறப்பான சேவையை இந்த தளம் வழங்குகின்றது

3.MovieFlixter முழுநேரமும் திரைப்படங்களை காணவிரும்புவோர்களுக்கு மிகச்சிறந்த இணையதளமாகும் . இதில் ஏராளமானதிரைப்படங்களை சேகரித்து அவைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது நிகழ்நிலை படுத்தி தொகுத்துவைத்துள்ளனர்

4.Movie4U என்பது மேலும் ஒருசிறந்த கட்டணமல்லாத நாம் விரும்பும் திரைப்படங்களை எளிதாக காண உதவிடும் இணையதளமாகும்.அதாவது மாதாந்திர கட்டணம்அல்லது வருடாந்திர கட்டணம் என எந்தவொரு கட்டணமும செலுத்தாமல் இதில் திரைப்படங்களை காணலாம் இதனை பார்வையாளர்கள் மிகஎளிய இடைமுகத்துடன் பயன்படுத்தி கொள்ளமுடியும் இதில் நாம் விரும்பியவாறு திரைப்படங்களைதேடிகண்டுபிடித்திடலாம் அல்லது திரைப்படங்கள் வெளியிடப்பட்ட தேதிவாரியாக தேடிபிடித்திடலாம் இந்த வசதியின் வாயிலாக சமீத்தில்வெளியான புதிய திரைப்படங்களை கூட மிகஎளிதாக காணஇந்த தளம் உதவுகின்றது

5.MovieWatcher என்பது மற்றொரு சிறந்த கட்டணமல்லாத நாம் விரும்பும் திரைப்படங்களை எளிதாக காண உதவிடும் இணையதளமாகும். இதில் நாம் விரும்பும் எந்தவொரு திரைப்படத்தையைும் இதனுடைய discovery எனும் வாய்ப்பின் வாயிலாக தேடிபிடித்திடலாம் கூடுதலாக தற்போது திரைப்படத்தை காட்சிகளை காணவிரும்பவில்லை ஆனால் வேறொரு சமயத்தில் காணவிரும்புகின்றோம் என திட்டமிடுபவர்கள் குறிப்பிட்ட திரைப்படத்தை பதிவிறக்கம்செய்து கொள்ளமுடியும் இதில் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவோ அல்லது நேரடியாக காணவோ பதிவு செய்து கொள்வதோ குறிப்பிட்ட கட்டணம் செலுத்தவோ தேவையில்லை

Leave a comment