1
கார்த்திகை தீபத்திருவிழாவும் தமிழர்களின் அறிவியலும்

இன்று (17 நவம்பர் 2019) கார்த்திகை மாத தொடக்க நாள். 


எந்தவொரு திருவிழாவும் அது தமிழர்களின் திருவிழாதானா? 

என்ற ஒரு சந்தேகம் வந்தால் உடனே விடை கிடைக்க ஒரே வழி அந்த திருவிழாவில் வானியல் சார்ந்த விசயங்கள் இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும்.

தமிழர்களின் எந்தவொரு திருவிழாவிலும் வானியல் சார்ந்த விசயங்கள் இருந்தால் 
அது தமிழர்களின் திருவிழா. 
இல்லையென்றால் அது ஆரியர்களால் புகுத்தப்பட்ட திருவிழா.

சமீபத்திய
கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், 
தமிழர்கள்: மதம், கடவுள் சார்ந்த விசயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை நிரூபித்ததைப் போலவே  
கார்த்திகை திருவிழாவும் 
மதம் சாராத தமிழர்களின் அறிவியல் (அ) வானியல் திருவிழாவே.

கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் வானியல் திருவிழா கார்த்திகை.

விண்ணில் கார்த்திகை நட்சத்திரக்கூட்டத்தில் ஒரு பெரும் நட்சத்திரக்கூட்டமே இருப்பதை கண்டுணர்ந்த தமிழர் அதனை  

மண்ணில் ஒளி விழாவாகக் கொண்டாடுவதே இந்தத் திருவிழா.

கார்த்திகை திருவிழா தமிழர்களின் வானியல் அறிவுத்திருவிழா. 
பூமி, நிலா, சூரியன், இந்த கார்த்திகை நட்சத்திரக்கூட்டம் நான்கும்  ஒரே நேர் கோட்டில் வரும் நாள் அது. காண்க:இவ்வருடம் 2019 ல் டிசம்பர் 10 ந் தேதியன்று இவ்விழா கொண்டாடப்படுகிறது.


கார்த்திகை திருவிழாவிற்கும் தமிழர்களின் வானியல் குறியீடு கார்த்திகேயன் என்ற முருகனுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகள் பற்றி மேலும் விளக்கமாக காண இங்கே செல்லலாம். காண்க:

தமிழர்கள் கார்த்திகேய நட்சத்திரங்கள் 6 என்று கூறக் காரணம் என்ன?

தமிழர்கள் கார்த்திகேய நட்சத்திரக் கூட்டத்தின் எண்ணிக்கை 6 எனக் கொண்டிருந்தாலும் ஐரோப்பியர் அந்த நட்சத்திரக்கூட்டத்தில் 7 நட்சத்திரங்கள் என்றே சொல்லி வந்தனர். காண்க: 

இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ அதில் 32 நட்சத்திரங்கள் உள்ளன என்றார். 
நவீன வானியல் 800 நட்சத்திரங்கள் என்கிறது. காண்க:


1. தொல்காப்பிய காலத்திலும் கூட திணைக்குழுக்களின் தெய்வங்களாக குறிக்கப்பட்டவை 4.

நான்கு நிலங்களுக்கும் நான்கு தெய்வங்கள்.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே
(தொல்.பொருள்.5)

இதில்
1. மாயோன் - மாயவன்- மால்- திருமால்- விஷ்ணு -விண்ணவம் 
2. சேயோன்- சேய் அவன்- 6 குழந்தை அ 6 படை கொண்ட அருகன்-முருகன்-கார்த்திகை நட்சத்திரம்.
3. வேந்தன்- வெயில் தரும் நெருப்பால் ஆனவன்- சூரியன்.
4. வருணன்-கடல் மற்றும் கடலில் இருந்து உருவாகும் மேக நீராவிக்காற்று

சிந்து நாகரீகத்திலும் முருக வழிபாடும் அதனோடு தொடர்புடைய 6 என்ற வானியல் குறியீடும் காண முடியும். 

இன்று நாம் உச்சரிக்கும் ஆறு (6) என்ற எண்ணுக்குரிய சொல் என்ன?
1. 6 என்ற எண்ணுக்கான சிந்து நாகரீக எழுத்து    '௬'  
இன்றைய தமிழ் எண்களிலும் இதே எழுத்து தான்.


2. இதன் உச்சரிப்பு 'சே' இதன் வடிவம், மீனைக்குறிக்கும் வார்த்தை. மனித இனத்தின் முதல் தொழில் மீன் பிடித்தல். அதனால் வான் நட்சத்திரங்களையும் விண்மீன் என்றே அழைத்தனர். காண்க:

சிந்துவெளி தமிழர் குறியீடுகளில் மண்ணின் மீனும், விண்ணின் மீனும். 
6 என்ற எண்ணின் வேர்ச்சொல் தோற்றம்:

3. தமிழில் சே, ஹிந்தியில்-சே (chheh), 


எபிரேயத்தில் - sesh, கிரேக்கத்தில்-seks, இலத்தீனில்-sex, ஜெர்மானியத்தில் - sechs, இத்தாலியில் - sei, ஆங்கிலத்தில்-six.

பல ஐரோப்பிய மொழிகளுக்கு மூல மொழியாக இருந்த இலத்தீன் மற்றும் இத்தாலிய மொழிகளில் எண்கள், குறிப்பாக ஆறு. 


   
           (6 தவிர பிற அனைத்து எண்களின் மூலத் தோற்றம் தமிழில் உள்ளதைக் காண:)

4. தமிழர்களின் பரம்பரை என்பதன் வேர்ச்சொல் விளக்கத்திலும் நமது மூதாதையர்களின் வரிசையின் படியும் பார்த்தால் ஆறாவதாக வரும் சொந்தம் சேயோன் - சேயோள் என்பதே.


800 நட்சத்திரங்கள் இருந்தாலும்  
பார்வைக்கு பிரகாசமாய் தெரியும்  
பெரிய நட்சத்திரங்கள் 6  
என்பதன் அடிப்படையில் அவ்வாறு பெயர்  
அமைந்தது.


5. அதனால் தான் கந்த சஷ்டி என்பதும் 6 நாட்கள் கொண்ட திருவிழாவாக இருக்கிறது. காண்க:

இங்கே சஷ்டி என்பதன் வேர்ச்சொல்  
6 என்ற எண்ணுக்குரிய சே என்ற தமிழ் வார்த்தையே

கார்த்திகை அல்லது Pleiades எனும் நட்சத்திரக் கூட்டத்தில்  உள்ள நட்சத்திரங்களில் மிகவும் பிரகாசமான நட்சத்திரத்தின் பெயர் 

அல் சேயோன்தான். Alcyone
அல் என்றால் தமிழில்  இரவு அ இரவின் ஒளி  

என்று  ஏற்கனவே பார்த்திருக்கிறோம். 
(அல்லும் பகலும் = இரவு பகல்) இந்த Pleiades அல்லது கார்த்திகை நட்சத்திரக்கூட்டம் 
பூமியிலிருந்து 440 ஒளி ஆண்டு தொலைவில் இருக்கிறது. 

(ஒரு ஒளி ஆண்டு என்பது 10 இலட்சம் கோடி கிலோமீட்டர் தூரம் ஆகும். பெருக்கிக் கொள்வோம். காண்க:)

முருகனின் 6 என்ற எண் குறிப்பது கார்த்திகை நட்சத்திரமே.

முருகனின் அறுபடை வீடு என்பது 
இந்த 6 நட்சத்திரங்களைக் குறிப்பதே.முருகனுக்கான வார்த்தை
ச ர வ ண ப வ என்ற ஆறு எழுத்து 
பெயர் குறிப்பதும் இந்த 6 நட்சத்திரங்களையே..
 
முருகனின் குறியீடான கீழேயுள்ள நட்சத்திரத்தின் முனைகளின் எண்ணிக்கையும் ஆறுவானில் தெரியும் கார்திகைக்கூட்ட 6 நட்சத்திரங்களின் பெயரே சேயோன் (சேய் - ஆறு). சேயோன், முருகன், சன்முகன் (சேய் முகன்), கார்த்திகேயன் எல்லாம் ஒரே பொருளே. அது ஆறு நட்சத்திரங்கள் என்பதே. 


Pleiades நட்சத்திரக்கூட்டத்தின் தமிழ்ப்பெயர் கார்த்திகை.
இந்த ஒரு நட்சத்த%3

Who Voted

Leave a comment