1
டிஜிட்டல் இந்தியாவில் நடக்கும் /நடக்க போகும் வாய்ப்புகள்,
டெல்லியில் காற்று மாசுக்கான பட முடிவுகள்
காற்று மாசுள்ள டெல்லி

இப்பொழுதே டிஜிட்டல் இந்தியாவின் டெல்லியில் காற்று மாசுபாட்டால்  தனியார் ஆக்சிஜன் பயன்பாடு வரத் தொடங்கி விட்டது. 

இனி நாளைக்கு டிஜிட்டல் இந்தியாவில்   என்னென்ன கூத்தெல்லாம் வரும்.. 

 ஹலோ ... நாங்க ஜியோ மின்வாரியத்தில் இருந்து  பேசுறோம்.நேற்று கடைசி தேதி நிங்க கரண்ட் பில் கட்டவில்லை. ஒரு நாள் தாமதம்ஆனதால் 18சதம் அபராதத்துடன் நாளைக்கள் கட்டிடுங்க..

பயணிகளின் கவனித்திற்கு மதுரையிலிருந்து சென்னை செல்லம்  பாண்டியன் எக்ஸ்பிரஸ் 20 நிமிடம் தாமதமாக வரும். இந்த தாமத்திற்கு வருந்துகிறது உங்களின் ரிலையன்ஸ் ரெயில்வே காரப்பரேசன்..

சாரி,  வண்டி கிளம்புறதுக்கு  முன்னாடியே நீங்க வநதிருக்கனும் . அதனால உங்க டிக்கெட்டுக்கு  ரீஃபண்ட் இல்லை. சிரமத்திற்கு வருந்துவது  அதானி ஏர்லைன்ஸ்.

யப்பா டேய்... ஆக்ஸிஸ் ஹோம் டெவலப்மெண்டில் இருந்து மெசெஸ் வந்திருக்குடா..? வீட்டுவரிய ஒரு வாரத்துக்குள் கட்டணும்மாம்டா...!!
நிலத்தை பதிவு செய்ய 5 நமிடம் போதும்.. எச் டி எப் சி யின் பத்திரப் பதிவு துறையின் புதிய திட்டம்.

பிஸ்லரி வாட்டர் போர்டின் புதிய அறிவிப்பு... தண்ணீர் தேவைக்கு தயவு  செய்து ஒரு வாரத்திற்கு முன்பே பதிவு செய்யவும் குறைந்த கேன்களே கையிருப்பில் உள்ளது.

அனில் அம்பானியின் கேஸ் டிஸ்ரிப்யூஷன்ஸ் இன்றைய சிலிண்டர் விலை 1200 பிளஸ் ஜி. எஸ் டி..

பெரியாரிலிருந்து  வாடிபட்டி போறவுக மட்டும் ஓலா மணி வச்சுக்கோங்க... மற்றவங்க ரூபா நோட்டுடன் சில்லரையாக கொடுங்க..- ஓலா டிரான்ஸ்போர்ட்.

காய்கறிகள் மளிகை பொருட்கள் வாங்கிட பதஞ்சலி கார்ப்பரேசன்.

ஸ்வீகி, சூமோட்டோ உபேர் டிரிங் டாஸ்மாக் ஆர்டர் செய்தால் சரக்குடன் சைட்டிசூம் டோர் டெலிவரி செய்யப்படும். இத்துடன் அட்டகாசமான சலுகை வழங்கப்படும்.

 கார் மற்றும் டூவீலர் ழிஜஸ்ட் பன்ன  paytm RTO app-யை டவுன்லோடு பன்னுங்க இருந்த இடத்திலே ரிஜிஸ்டர் பன்னலாம்

 மினிமம்  பேலன்ஸ் உங்கள் கணக்கில் இல்லாததால்... நீங்கள்  மினிமம் பேலன் உடன் .பைன் 950-யையும் சேர்த்து கட்டவும்.


சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.

Who Voted

Leave a comment