1
65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019

இந்த ஐந்து கிராமங்களைச் சேர்ந்த நாங்கள் இனி சாதி பார்க்க மாட்டோம். அப்படி யாரேனும் பார்த்தால் அவரை ஊர்விலக்கம் செய்துவிடுவோம்

இன்றையதேதியில் ஒரே ஒரு ஊரைச் சார்ந்த மக்கள் இப்படி முடிவெடுத்து அமல்படுத்தினாலே நாம் அதிர்ச்சியில் உறைந்து விடுவோம்


ஐந்துகிராம மக்கள் ஒன்றுகூடி இப்படி ஒரு முடிவெடுத்து அதை அவர்களது மன்னனிடம் கூறி அவனது ஒப்புதலைப் பெற்றிருக்கிறார்கள்


அதைகல்வெட்டாக்கியும்ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்


அதுவும்எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர்


மயிலாடுதுறைக்கு அருகில்உள்ள திருமங்கலம் என்ற சிற்றூரில் உள்ள தொள்ளாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் இருக்கிறது அந்தக் கல்வெட்டு


வேலூர்கல்யாணராமன் என்பவர் அந்தக் கோவிலில் புதைந்து கிடந்த ஒரு கல்வெட்டைக் கண்டெடுக்கிறார். அதில் என்ன எழுதி இருக்கிறது என்பது  அவருக்குத் தெரியவில்லை. கல்வெட்டு என்கிற வகையில் இதன் வயது பல நூறு ஆண்டுகள் இருக்கும் என்பதும், அது ஒரு முக்கியமான அவணமாக இருக்கக் கூடும் என்பதும் அவருக்குப் புரிகிறது


ஊர்மக்களை அணுகுகிறார்


அவர்களுக்கும் ஏதும்புரியவில்லை. ஆனால் ஒரு பொக்கிஷம் என்பதும் அதை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் புரிகிறது


அதைஎடுத்து சுத்தம் செய்து நட்டு வைக்கிறார்கள்


குடவாசல்பாலகிருஷ்ணனின்முயற்சியால் கல்வெட்டு விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்த தகவல்கள்தான் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன


சாதிதோன்றிய நாளன்றே சாதி மறுப்பும் தோன்றியிருக்கும். அது ஒரு முனகல் வடிவத்தில்கூட இருந்திருக்கலாம்.


அதுஅன்றேகூட நசுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அப்போதே நிச்சயமாக தோன்றியிருக்கும்.


பதிமூன்றாம்நூற்றாண்டு முதல் தமிழகத்தில் பல பகுதிகளில் சாதிகள்இடங்கை சாதிகள்”, “வலங்கை சாதிகள்ஆகிய இரு பிரிவுகளுக்குள் உள்ளடங்கின என்று இந்தக் கல்வெட்டு கூறுகிறது.


ஒருகட்டத்தில்இடங்கை பிரிவில்’ 98 சாதிகளும், ‘வடங்கை பிரிவில்’ 98 சாதிகளும் இருந்திருக்கின்றன. இது பையப் பைய இடங்கைப் பிரிவில் 6 சாதிகளும் வலங்கைப் பிரிவில் 30 சாதிகளுமாக ஒரு கட்டத்தில் சுறுங்கி இருக்கின்றன


இவர்களுக்கிடையே அவ்வப்போதுகலவரங்கள் வெடித்திருக்கின்றன. சதா சண்டை போட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள்


இந்தமக்கள்தான் சித்திரை மாதத்தில் ஒருநாள் ஒன்றுகூடி,


1)   குறுக்கைநாடு

2)   காளிநாடு

3)   விளத்தூர்நாடு

4)   மாந்துரைநாடு

5)   திருமங்கலநாடு


ஆகியகிராமங்களைச் சார்ந்த குடிமக்களாகிய நாங்கள் இனி இந்த சந்திர சூரியன் உள்ளமட்டும் இடங்கை வலங்கை என்று வேறு எந்த விதமாகவோ எங்களுக்குள் பேதம் பார்க்க மாட்டோம் என்றும் அப்படி பார்ப்பவர்களை விலக்கம் செய்துவிடுவோம் என்றும் அந்தக் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறார்கள்


800 ஆண்டுகளுக்கு முன்பே ஐந்து கிராம மக்கள் தாங்கள் இனி சாதி பார்க்க மாட்டோம் என்று பிரகடனப்படுத்தியிருப்பதை இன்றைய சாதிய இளந்தலைவர்கள் அருள்கூர்ந்து கவனிக்க வேண்டும்


கூடியவிரைவில் அந்த ஐந்து கிராமங்களுக்கும் சென்று அந்த மண்ணை வணங்கிவிட்டு வர வேண்டும்


********************************************************************************** மாணவர்களேஇல்லாத பள்ளிகள் இழுத்து மூடப்படும். மிகக் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டுள்ள பள்ளிகளில் இருந்து மாணவர்களை அருகில் உள்ள வேறு பள்ளிகளுக்கு மாற்றிவிட்டு அந்தப் பள்ளிகளையும் மூடிவிடுவோம்


மூடப்பட்டபள்ளிகளை நூலகங்களாக மாற்றிவிடுவோம் என்று கூறிக் கொண்டே இருந்தது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை


10.08.2019 அன்று 46 துவக்கப் பள்ளிகளை இழுத்து மூடவும் செய்தது. அவ்வாறு மூடப்பட்ட பள்ளிகளை நூலகங்களாக மாற்றும் முயற்சியில் இறங்கியது.


இதெல்லாம்வழமையான செய்திகள்தாம். ஆனால் அப்படி மூடப்பட்ட 46 பள்ளிகளில் ஒன்றை மூடிய மூன்றே நாளிலும் மற்றொரு பள்ளியை ஆறே நாளிலும் திறக்க வைத்திருக்கிறார்கள் மக்கள் என்பதுதான் நம்பிக்கையைத் தருவதும் அனைவருக்கும் கொண்டுபோகப்Ī

Who Voted

Leave a comment