1
65/66, காக்கைச் சிறகினிலே ஆகஸ்ட் 2019

சிவன் பிறந்தது எப்போது?
சொல்லமுடியுமா நீங்கள்?


இயேசுபிறந்தது எப்போது?

சொல்லமுடியுமா நீங்கள்?


கடவுள்கள்பிறப்பதற்கு முன்பே

நாங்கள்இங்கே இருந்தோம்


நாங்கள்பிறந்து

ரொம்பகாலத்திற்குப் பிறகுதான்

கடவுள்கள்பிறந்தார்கள்


மனிதர்கள்மத்தியிலிருந்துதான்

அவர்கள்பிறந்தார்கள்


நாங்கள்

கடவுளுக்குமுன் பிறந்தவர்கள்


தெற்குபீஹாரில் கட்டப்படவிருந்த, தமது வாழ்வைக் காவு கேட்கக்கூடிய அனைக்கட்டிற்கு எதிராக நடந்த கூட்டமொன்றில் ஆதிவாசி ஒருவர் பாடிய பாடல் இது. இதை தான் தொகுத்தகடவுளுக்கு முன் பிறந்தவர்கள்என்ற ஆதிவாசிகளின் கவிதை நூலில் வைத்திருக்கிறார் தோழர் இந்திரன்.


ஆதிவாசி, காடு, கடவுள் என்கிற வரிசைக்கிரமத்தில் நிச்சயமாக கடவுள்தான் இளையவன். ஏனெனில் ஏதோ ஒரு கட்டத்தில் மனிதனால் படைக்கப்பட்டவனே அவன். ஆதிவாசியா காடா? யார் மூப்பு என்பதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை.


ஆதிவாசியும், காடும் ஒன்றிற்காக மற்றொன்று என்ற வரலாற்றிற்கு சொந்தக்காரர்கள். காடு அழிந்தால் கூடவே ஆதிவாசிகளும் அழிந்துவிடுவார்கள். ஆதிவாசிகள் அழிந்தால் காடு அழிந்துவிடும். இன்னும் கொஞ்சம் சரியாய் சொல்வதெனில் இருவரையும் பிரித்துவிட்டால் இருவரும் அழிந்துபோவார்கள்.


அவர்கள்காடுகளில் சுள்ளி பொறுக்கினார்கள். ஆனால் காடு அழிந்துவிடவில்லை. காரணம் ஒரு டசன் கன்றுகளையேனும் நட்டுவிட்டுதான் ஒரு காய்ந்த மரத்தில் அவர்கள் கை வைப்பார்கள்.


வேட்டையாடுவார்கள்தான். ஆனால்அவர்கள் வேட்டையாடி விலங்குகள் அழிந்ததாய் வரலாறு இல்லை.


அவர்கள்காடுகளின் புதல்வர்கள் அல்ல. அவர்களே காடுகள். காடுகளே அவர்கள்.


காடுகளைஅழித்து பணப்பயிர்களை விளவித்து கொள்ளை அடிப்பதென்றும், கனிமங்களை சூறையாடிக் கொண்டுபோய் தங்களது ஆயிரமாவது சந்ததிவரைக்கும் சொத்து சேர்ப்பதென்றும் கார்ப்பரேட்டுகளுக்கு வெகுகாலமாய் ஆசை.


இதற்குகாட்டை அழிக்க வேண்டும். எப்படி இத சாத்தியப் படுத்துவது?


யாருக்குயார் எஜமானன் என்று அறுதியிட முடியாத கார்ப்பரேட்டுகளும் ஆளும் கனவான்களும் இதற்காக நிரம்பக் கசக்கிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லாமல் போனது. இருவருக்கும் அந்த சூட்சுமம் தெரிந்தே இருந்தது.


காடுஅழிய வேண்டும் என்றால் ஆதிவாசிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது புரியாத அளவு மக்குகள் அல்ல அவர்கள்.


இதற்காகஅரசுகள் அவ்வப்போது வனச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதை வாடிக்கையாக் கொண்டிருக்கின்றன.


இந்தஅடாவடியை 1970 களின் தொடக்கத்தில் இருந்து அரசுகள் ஆரம்பித்துவிட்டன. ஆதிவாசிகளை காடுகளில் இருந்து வெளியேற்ற என்ன வன்முறைகளை எல்லாம் செய்ய முடியுமோ அத்தனை வேலைகளையும் செய்துகொண்டே இருக்கின்றன.


காடுகளில்இருந்து வெளியேறுவதும் செத்து அழிவதும் ஒன்றுதான் என்பதை உணர்ந்த அந்த வன மக்கள் வலுவாக அதை எதிர்த்துப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் விளைவாக இந்திய வன அமைச்சகம் 18.09.1990 அன்று ஒரு வழிகாடுதலை வெளியிடுகிறது. 25.10.1980 வரை ஆதிமக்கள் அனுபவித்துவரும் நிலங்களை அவர்கள் உரிமை கோருகிற பட்சத்தில் ஒப்படைக்கலாம் என்கிறது அந்த வழிகாட்டுதல் உத்தரவு.


இட்துசாரிகள்பாராளுமன்றத்தில்வலுவாக இருந்த காலத்தில் ஆதிமக்களுக்கான ஒரு ஆதரவுச் சட்டத்தை அவர்கள் கொண்டுவரச் செய்தனர். அதன்படி வனத்தைப் பயன்படுத்தும் உரிமை அவர்களுக்குக் கிடைத்தது.


இதற்கிடையில்அனுபவ உரிமை கோரிய ஆதிமக்களின் பெரும்பான்மை மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் பி. சண்முகம் அவர்களின் கூற்றுப்படி நாற்பத்தி இரண்டரை லட்சம் கோரிக்கைகளில் பத்தொன்பதே முக்கால் லட்சம் கோரிக்கைகள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.


இந்தநிலையில் தங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் அவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. பிரச்சினைகள் வலுவடையவே இதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.


இதன்தீர்ப்பு 24.07.2019 அன்று வரும் என்று தெரிகிறது.


வனம்தவிர ஏ&%

Who Voted

Leave a comment