1
பெண்


அம்மா, ரொம்ப டயர்டா இருக்கு. கொஞ்சம் தண்ணி கொடுஎன்று சொல்லியபடியே வீட்டினுள் நுழைந்த வந்தனாவை கொஞ்சம் ஆச்சரியமாகவே பார்த்தாள் அவளின் அம்மா சாரதா.

என்னடா வந்தனா, வழக்கமா சனிக்கிழமை இல்லை ஞாயிற்றுகிழமை தான் இங்க வருவ. ஆச்சரியமா புதன்கிழமை வந்திருக்க! வேலைக்கு போகலயா? ரமேஷ் எப்படியிருக்கார்?” சாரதா கேள்விகளை அடுக்க ஆரம்பித்தாள்.

அம்மா, டயர்டா இருக்குன்னு சொன்னேன். தண்ணி கேட்டேன். எதுவுமே கேட்காம நீ உன்பாட்டுக்கு கேள்வி கேட்டா என்ன அர்த்தம்?” 

சரி, கொஞ்சம் இரு, காஃபி கொண்டுவரேன்என்றவாரே சமையறையில் நுழைந்தாள் சாரதா.

வந்தனாவுக்கும் ரமேஷுக்கும் திருமணம் ஆகி ஒன்றறை வருடம் தான் ஆகிறது. இருவரும் தங்கள் பெற்றோருக்கு ஒரே பிள்ளைகள். தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து, ஓய்வுகாலத்துக்கு கொஞ்சம் சேர்த்து வைத்து, வருடம் தவறாமல் வரி கட்டும் typical middle class families.

தான கொண்டுவந்த காஃபியை சோஃபாவில் சாய்ந்து கண்ணை மூடியவாறே உறிஞ்சி குடிக்கும் வந்தனாவை பார்த்து மறுபடியும் தன் கேள்விகளை ஆரம்பித்தாள் சாரதா. “சொல்லுடா, எதாவது பிரச்சனையா?”

ஆமாம்மா, அதை பத்தி சொல்லத்தான் இங்க வந்தேன். I have decided to divorce Ramesh” என்று சர்வசாதாரணமாக சொன்ன வந்தனாவை சுனாமி அலை அடித்த முகத்துடன் முறைக்க ஆரம்பித்தாள் சாரதா.

தெரியும் மா. உங்க தலைமுறை உங்களுக்கு சொல்லி கொடுத்த ஃபார்முலா இது. எந்த பிரச்சனை வந்தாலும் டைவர்ஸ். சின்ன விஷமமோ, பெரிய  விஷயமோ, எதிலும் தெளிவான சிந்தனை கிடையாது. 

நீங்க படிச்ச படிப்பு உங்களூக்கு ஒரு டிகிரி தான் கொடுத்திருக்கு, அறிவை கொடுக்கலை. ஃபேஸ்புக், வாட்ஸ ஆப் எல்லாத்தையும் பார்க்க வேண்டியது, ஏதாவது ஒரு எதிர்பார்புடன் வாழவேண்டியது. அப்பறம் அது சரியில்ல இது சரியில்லன்னு ஏதாவது ஒரு காரணத்துக்காக டைவர்ஸ் பண்ணவேண்டியது.

எங்க காலத்திலன்னு ஆரம்பிச்சு உனக்கு உபதேசம் கொடுக்க விரும்பல. ஆனா உங்க தலைமுறை பசங்களுக்கு பிரச்சனைகளை சந்திக்கவோ எதிர்த்து போராடவோ தைரியம் இல்லை. சொல்லு உன் பிரச்சனை என்ன?”


பார்த்தியாமா, எடுத்தவுடன் உன் பிரச்சனை என்னன்னுதான் கேட்கற, பிரச்சனை என்னன்னு தெரியாமலே.

நீ சொன்னது தப்பில்லமா. நிறைய பேர் இப்படித்தான் இருக்காங்க. ரமேஷ் வரையில் அதீத சுயநலத்தோட இருக்கார். தன் வாழ்க்கை, தன் சுகம்ன்னு இருக்கிறவருக்கு எதுக்கு குடும்பம் கல்யாணம்? லீவு கிடைச்சா ஃபெரண்ட்ஸோட குடிக்க வேண்டியது. கண்ணு மண்ணு தெரியாம போதையோட வீட்டுக்கு வந்து தூங்க வேண்டியது. 

கல்யாணம்ன்னா என்னம்மா? வாழ்க்கைய பகிர்வது தானே? ரமேஷ் விஷயத்தில அவர்கிட்ட பகிர எதுவும் இல்லம்மா. அவர் கிட்ட நிறைய நாள் பேசினேன். இது தான் நான், இப்படித்தான் இருப்பேன்ங்கிறார். 

இப்பல்லாம் குடிக்கறது சகஜம்ன்னு சொன்னா நான் ஏத்துக்க தயாராயில்லை. 

காலப்போக்கில மாறலாம், இல்ல நீ அவர மாத்தலாம்ன்னு சொன்னாலும் நான் ஏத்துக்க தயாரில்லை.

ஒரு விஷயத்தில் நான் தெளிவா இருக்கேன்மா. கல்யாணம்கிறது ஒரு பந்தம். நல்லதோ கெட்டதோ 
சேர்ந்தே சந்திப்போம்கிற ஒரு agreement. 


கணவரை திருத்த வேண்டிய ஒரு task ன்னு நான் நினைக்கல.

என்னை பொறுத்தவரை ரமேஷ் நீ எனக்கு கொடுத்த partner. Project இல்ல

சாரதாவுக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.


Who Voted

Leave a comment