1
ஷேர் செய்யுங்க பாஸ், ஷேர் செய்யுங்க

முதலில் இரு சின்ன game விளையாடுவோமா? “நீங்கள் வாட்சப்பிலோ, முகநூலிலோ (Facebook) வரும் முக்கால்வாசி தகவல்களை ஷேர் செய்யும் அசாமியா? Congrats bro, உங்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின்  ட்ரூடோ கனடா குடியுரிமை தருவாரஎன முகநூலில் பதிவு செய்யுங்கள். எவ்வளவு லைக்குகள் மற்றும் ஷேர்கள் விழுகிறது என்று நீங்களே வியந்துபோவீர்கள். 

என்ன செய்ய பாஸ், நம்மாளுக டிசைன் அப்படி என்றார் நண்பரொருவர். முகநூலும் டிவிட்டரும் நாம் பயன்படுத்துவது போய், அவை நம்மை பயன்படுத்தும் காலமிது. சில நாட்களுக்கு முன் ஒரு பதிவை காண நேர்ந்தது. இதற்கு ஐம்பத்திமூவாயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர். இம்மாதிரி கப்பலுடன் இணைந்த விமானத்தை இன்னும் Avengers படத்தில் கூட காட்டலயே பாஸ் என்றேன் நண்பர்களிடம். தமிழின துரோகி என்று நீங்கள் முத்திரை குத்தப்படலாம் என்றார்கள் அவர்கள். நமக்கேன் சார் வம்பு!


டேய் உங்க அலப்பரைக்கு எல்லையே எல்லையே இல்லையாடா...அந்த மனிஷன் எனக்கு தெரிஞ்சு ஒரே முறை பொங்கல் வெச்சார். அதுக்கப்பறம் அவரை வெச்சு நம்மாளுங்க தினம் தினம் தீபாவளி கொண்டாடரீங்களே. என்னதாண்டா பிரச்சனை உங்களூக்கு?எனறு தான் கேட்கத் தோன்றுகிறது. 


என்னமோ போங்க பாஸ், அந்தாள வச்சு செய்ராங்க….வச்சு வச்சு செய்ராங்க. 


2015ல் டில்லி ரயிலில் குடிபொதையில் தடுமாறி விழுந்ததாக சலீம் என்பவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படார். எட்டாயிரம் ரூபாய்க்கு ஒரு சைனா ஃபோனும் 150 ரூபாய்க்கு படமெடுத்த data plan-னும் இருந்தால் போதும், எதை வேண்டுமானாலும் படமெடுத்தெடுத்து இணையத்தில் உலாவ விடலாம் என்று நினைப்பவர் முன் அந்த சலீம் மயங்கி விழுந்ததுதான் அவர் செய்த பிழை. ஊடகங்களூம் அவரை தன் பங்கிற்க்கு வறுத்தெடுக்க, நமது key board warriors மட்டும் அவரை சும்மா விடுவார்களா? சில மாதங்களுக்கு பின் அவர் பக்கவாதத்தில் தான் வீழ்ந்தார் என வந்த செய்தி என்னவோ யார் கண்ணில் படவில்லை.
எதை பகிற்கிறோம், எதற்காக பகிற்கிறோம் எனத் தெரியாமல் சமூக வளைத்தளங்களை பயன்படுத்துவோர் ஏராளம் தற்சமயம். தன் கருத்துக்களை பதியும் போதோ, மற்றொருவரின் படிவுகளை பகிறும்போதோ அதில் எத்தனை உண்மை என ஆராயாமல் போகிற போக்கில், just like that, பதிவு செய்வது ஏனென்று தெரியவில்லை.


இப்பவே எது உண்மை எது பொய் என விளங்கவில்லை, பிற்காலத்தில் எப்படியோ!


தனக்கு வந்த செய்திகளை அப்படியே ஷேர் செய்வது, selfie எடுத்து தள்ளி மற்றவர்களை பயமுறுத்துவது, காலையில் ஒரு good morning மாலையில் good night, இதை தாண்டி செல்போனின் reach எவ்வளவு என்று தெரியவில்லை. Artificial Intelligence is the future என்கிறார்கள். என்னகென்னவோ முதலில் natural stupidity-யை நோக்கி இன்னமும் செல்கிறோமோ என தோன்றுகிறது.


வாழிய செல்போன், வாழிய Facebook, வாழிய வாழிய forwards.


என்னவோ பாஸ், சொல்லனும்ன்னு தோனிச்சு. நீங்க என்ன நினைக்கிறீங்க?

Who Voted

Leave a comment