1
எல்லாம் எமக்குத் தெரியும்

முதலில் ஒரு சின்ன disclaimer. இந்த பதிவு மனவியல் பற்றியதல்ல. நமக்கு தெரிந்த ஒரேவியல்இந்த அடை அவியல் தான் பாஸ். “அப்போ என்ன தான் சொல்லவரீங்கஎன்று நீங்கள் கேட்பது சப்தமாகவே காதில் விழுகிறது. நடைமுறை வாழ்கையில் நான்/நீங்கள் சந்தித்த அனுபவங்கள், அல்லது எண்ணகுவியல்கள் மட்டுமே இதில் அடங்கும். 


அக்காலத்தில வரும் நகைச்சுவை காட்சிகள், முதல் முறை நிறைய சிரிக்க வைக்கும், பின் நிறைய சிந்திக்க வைக்கும். அறிவாளி திரைப்படத்தில் வரும் காட்சி சில தினங்களுக்கு முன் பார்க்க நேர்ந்தது. இதில் வரும் நடிகையை (முத்துலட்சுமி) போல பலபேரைப் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை எனக்கு வந்தது. இந்த “I know it all” என்ற மனப்பான்மை தன்னை பற்றவர்களிடமிருந்து எவ்வளவு தூரம் விலக்கி வைக்கும் என்ற எண்ணம் சிலரிடம் இல்லாமல் போனது ஏனென்று விளங்கவில்லை. தான் ஒரு genius என்று காட்டிக்கொண்டால் எதோ ஒரு தேசத்திற்க்கு அவர்களை பட்டாபிஷேகம் செய்வார்களோ என்னவோ. சகஊழியர் ஒருவர் தான் ஒரு நடமாடும் Wikipedia பாதி Google பாதி கலந்து செய்த கலவை நான் என்று பாடாத குறை தான். மனிதர் எதை கேட்டாலும் அரை நொடியில் பதில் சொல்வார். அந்த மண்டையில் இவ்வளவு சரக்கா என்று கேட்டால், இவ்வாறு விளக்கலாம். மத்திய அரசிடம்தமிழ்நாட்டை விட்டுடுங்க, இவர் தலையை வேண்டுமென்றால் drill செஞ்சு பாருங்க, நியுட்ரீனோ ஹைட்ரோகார்பன் எல்லாம் கிடைக்கும்என்று எழுதிப்போடலாம். 

சில நாட்கள் முன்பு வேறு ஒருவரை சந்திக்க நேர்ந்தது. இவரும் சிங்கப்பூரில் வேலை செய்பவர். பேச்சுவாக்கில்,

நான்: “சார் நீங்க எந்த ஊரிலிருந்து வரீங்க?”

அவர்: “டில்லியிலிருந்து

நான்: “ஒஹோ. என் அக்கா கூட குருகிராம் நகர்ல தான் இருக்காங்க” - குருகிராம் டில்லிக்கு மிக அருகில் உள்ள ஊர்.

அவர்: “ஊரா அது. ஒரு ரோடு போட கூட தெரியல. நேரா ரோடு போடாம வளைஞ்சு வளைஞ்சு போடராங்க”

நான்: “உங்க பிள்ளைங்க எங்க படிக்கிறாங்க?”

அவர்: “International school-ல. உள்ளூர் பள்ளியில மனிஷன் படிப்பானா சார். இந்த பசங்களுக்கு ஒரு விஷயமும் தெரியாது”

நான்: “கிரிக்கெட் பாத்தீங்களா சார். ஜடேஜா நல்லா விளையாடினார் இன்னைக்கு”

அவர்: “மனிஷனா சார் அவன். ஒரு பந்து கூட விளையாட தெரியல”. விட்டால் அவரை நாடு கடத்துவார் என்று கூட தோன்றியது.


இந்த மனிதருடன் இனி பேசி பயனில்லை என தெரித்து ஓட வேண்டிய சூழ்நிலை. தான் அதிமேதாவி என காட்டிக்கொள்ளும் எண்ணம் மட்டும் இல்லாமல், எதிரில் இருப்பர்வர்களூக்கு எதுவும் தெரியாது என்று நிறுபணம் செய்வது ஒரு வித கருத்து தீவிரவாதம். தான் தோற்று எதிரில் இருப்வர் வெற்றி பெற்றால் என்னாவது என்ற பயம், தான் மெத்த படித்த அறிவாளி அல்லது ஒரு intellectual என்ற தன்னையே நினைத்துக்கொள்ளும் ஒரு தற்பெருமை, நீ சொல்லி என்ன நான் கேட்பது என்ற கர்வம், எல்லாம் கலந்த ஒரு design.


உன்மையிலேயே, ஒரு விஷயத்தை முழுவதும் புரிந்துகொண்டவர் (அப்படி ஒருவர் இருந்தாலும் கூட), தான் சொல்ல வந்த விஷயத்தை மட்டுமே விளக்க முயல்வார். அங்கே மற்றவர்களிடம் தன் கருத்து சரியாக சென்றடைய வேண்டும் என்ற intention இருக்கும்.  தான் பார்த்த, கேட்ட விஷயங்களில் எல்லாம் ஒரு opinion இருக்கவேண்டுமா என்ன? அப்படியே இருந்தாலும் மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பது ஒருவரின் மனமுதிர்சியின் அடுத்த நிலை. அது ஒரு கலந்துரையாடலை சகஜ நிலையில் வைக்கும். 


எது எப்படியோ, “அப்படியா சார், நீங்க சொன்னா சரிதான்” என்று சொல்ல பழகிவிட்டேன். அவர் தலையில் இருக்கும் கிரீடம் அவரிடமே இருக்கட்டும்.


என்னவோ பாஸ், சொல்லனும்ன்னு தோனிச்சு. நீங்க என்ன நினைக்கிறீங்க?


Who Voted

Leave a comment