1
ஒன்று இரண்டு மூன்று முடிவிலி |One Two Three…Infinity – 0

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,


எப்ப… பதிவெழுத துவங்கினாலும்… முதல்ல மன்னிப்பு கேட்பதுபோலவே ஆகிடுது. நீண்ட நாட்களாக வழக்கம் போலவே காணாம போய்டு இப்ப தான் வரேன்… ஆனா, இப்பவும் நா உங்களுக்கு எந்த பதிவும் எழுதல என்பதுதான் கொஞ்சம் வருத்தம்…

ஆம்.

இது நமது தளத்தில் ஒரு புதிய தொடர்…


தாய்மொழி பற்றாளர்…

அயல்நாடு வாழ் தமிழர்…

அறிவியல் எழுத்தாளர்… மற்றும் மொழிபெயர்ப்பாளர்…

என்று பன்முகங்கள் கொண்ட “செயபாண்டியன் கோட்டாளம்” ஐயா அவர்களின் மொழிபெயர்ப்பு நூலான,

“ஒன்று, இரண்டு, மூன்று, முடிவிலி… “

நூலை தொடராக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.


இந்த நூல் ஆங்கிலத்தில் “ஜார்ஜ் கேமாவ் – George Gamow” எழுதிய

“One, Two, Three… Infinite” – ன் மொழிபெயர்ப்பு ஆகும்.


jk

செயபாண்டியன் கோட்டாளம் – ஐயா குறித்து சில வரிகள் :


ஜெ. கோட்டாளம் அறிவியல் தகவல்தொழில்நுட்ப ஆய்வும் வளராக்கமுமாகிய துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 1954-ஆம் ஆண்டு இந்தியாவின் தென் தமிழ்நாட்டிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தார். சென்னையிலுள்ள இந்திய நுட்பியற் பயிலகத்திலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி பெற்று, சாண்டியேகோவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஸ்க்ரிப்ஸ் ஆய்வுப் பயிலகம், ஹார்வர்டு பல்கலைக்கழகம், கிரே ஆய்வகம் முதலிய இடங்களில் பணியாற்றினார். புரதம், அணுக்கரு அமிலம் போன்ற பெருமூலக்கூறுகளின் கட்டமைப்புகளையும் இயக்கங்களையும் மிகைக்கணினியில் பாவனையாக்குவதற்கான மென்பொருளை உருவாக்குவதில் இவர் பங்களித்தார். மேலும், கணக்கீட்டுப் பாய்ம இயக்கவியல், புள்ளியிய இயற்பியல் ஆகிய துறைகளிலும் பங்களித்துள்ளார். தற்போது ஆங்கில மொழியிலுள்ள அறிவியற்செல்வங்களை திட்டமிட்ட ஒழுங்குமுறையில் தமிழுக்குக்கொண்டுவரும் முயற்சியிலும் அவ்வாறு கொண்டுவரத் தேவையான உதவிப்பொருட்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.


செயபாண்டியன் கோட்டாளம் – ஐயாவிடம் இருந்து சில வரிகள் :


தமிழர் ஒரு வேற்றுமொழியில் புலமைபெற்று அதன்பிறகே உயர்தர உயர்நிலை அறிவுத்துறைகளில் செயலாற்றலாம் என்ற நிலையை மாற்றி தமிழருக்கு நேரடியாக அறிவியலையும் தொழின்னுட்பங்களையும் வழங்கும் பணியை இந்த தளம் சிறப்பாகச் செய்துவருகிறது. சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியலாளருள் ஒருவரான ஜார்ஜ் கேமாவ், பல அறிவியல் ஆய்விதழ்களில் ஆய்வுரைகளும், கல்லூரி மாணவர்களுக்கு தேவையான பாடநூல்களையும் எழுதியது மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கான அறிவியல் நூல்கள் பலவற்றையும் எழுதியிருக்கிறார். அறிவியலை பொதுமக்களிடையே பரவச்செய்ததற்காக ஒன்றிய நாடுகளின் கல்வி, அறிவியல், கலாச்சார ஒருங்கமைப்பின் (UNESCO) கலிங்கா பரிசை 1956ஆம் ஆண்டில் பெற்றார். இவர் எழுதிய One, Two, Three, Infinity என்ற நூல் உலகப்புகழ் பெற்றது. இதில் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் எளியநடையில் கதைபோலவும் வேடிக்கையாகவும் அறிவியலை வழங்குகிறார். இந்த நூலின் தமிழ்வடிவத்தை இந்த தளத்தில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.


மிக்க நன்றி ஐயா…


ஐயாவின் தொடர்புக்கு : G+FaceBook.   


நன்றி  நண்பர்களே…!


 


 

Who Voted

Leave a comment