1
பிரபஞ்ச நடனம் | cosmic dance – 1

பிரபஞ்ச நடனம்


– பொன் குலேந்திரன், கனடா


320px-Lingothbavar


ஆரம்பமோ முடிவோ அறியப்பட முடியாத இப்பிரபஞ்சம் தன்னகத்தே கணக்கிலடங்கா நட்சத்திரக்கூட்டங்களையும் கிரகங்களையும் ஆகாய வெளிகளையும் கொண்டுள்ளது. நட்சத்திரக் கூட்டங்கள் வெவ்வேறு வடிவங்களில் சுழன்று கொண்டிருக்கின்றன. சூரிய குடும்பத்திலே உள்ள கோள்கள் ஒரு மையப் புள்ளியைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன.


இப்பாரிய சமுத்திரமாகிய இப்பிரபஞ்சக் கடலிலே நாம் ஒரு சிறுதுளி. இப்பிரபஞ்சத்திலே தோன்றிய யாவும் ஆரம்ப காலம் தொட்டு நாளும் பொழுதும் இடைவிடாது மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. தாவரங்களும் விலங்குகளும் எப்படித் தம்மை சூழலிற்கேற்ப மாற்றிக்கொண்டிருக்கின்றனவோ அதே போன்று மனிதனிலும் அமைதியாக மாற்றம் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. இதையே சீவ நடனம் (Cosmic dance) என அழைக்கின்றோம். எமக்குள்ளே நடைபெறும் இச்சீவ நடனம் சத்தியை வெளியிடுவதோடு ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட சீரான முறையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் ;உறுப்புக்களின் எல்லா மூலங்களும் பங்கு கொள்ளும்.


இரசாயன மூலங்களின் அசைவுகளை கண்டறியும் தொழில் நுட்ப அறிவு மூலம் எமது உடலின் உள்ளேயும் வெளியேயும் வந்து போய்க்கொண்டிருக்கும் இரசாயன மூலகங்களை அறியலாம். எமது உடம்பிலே உள்ள பில்லியன் கணக்கான சீவ அணுக்களைக் கொண்ட உறுப்புகள் ஒரு குறிப்பிட்டகால இடை வெளியில் தம்மை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக உன் வயிற்றுச் சுவர்த்தோல் கிழமையில் ஒருமுறையும், கல்லீரல் ஆறு கிழமைகட்கு ஒரு தடவையும் தம்மை புதிதாக்கிக் கொள்கின்றன.


பிரபஞ்சத்தின் தோற்றம்:


இருக்கு (Rig Veda) வேதக் கருத்துப்படி இப்பிரபஞ்சத்தின் தோற்றத்தின் முன் எல்லாவற்றையும் ஒரு முதல்வன் தாங்கிக்கொண்டிருந்தான். அவன் யாராலும் அறிந்துகொள்ள முடியாதவனாக இருந்தான். அவனே பொற் கருப்பை (Golden womb) . அதில் இருந்தே எல்லாம் தோன்றின. பொன்நிறமே சத்தியின் நிறம். என வேத நூல் கூறுகின்றது. உலகத் தோற்றத்தின் முன் எல்லாமே சூனியமாகவே இருந்தன. ஆனால் நவீன பௌதீகம் எல்லாச் சத்திகளும் ஒரு புள்ளியிலே அடங்கி இருந்தன எனக் கூறுகின்றது.


பிராமியக் கருத்து:


பிரபஞ்சம் ஒரு முட்டை என்ற கருத்து பழைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் காணப்படுகின்றது. இதற்கு மூலமாக இருந்தது றிக் வேதமே. இதன்படி இப்பிரபஞ்சம் எல்லையற்றது. இதன் எல்லைகள் விரிவு ஒடுக்கம் ஆகிய இரு சத்திகளுக்கிடையேயான வலுப்போரே. நட்சத்திரங்களுக்கிடையான ஈர்ப்புவிசையும் எதிர் விசையும் இடையேயான போட்டி பிரபஞ்சத்தின் விரிவை தடைசெய்தது. பின் ஒடுக்கு சத்தி வலுவிழந்து வரிவியக்க சத்தி வலுப்பெற்று விடவே விரிவடைந்து செல்லும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகின்றது.


ஆக்கம் அழிவு இவை இரண்டும் எங்கும் என்னேரமும் நடைபெறும் நிகழ்ச்சிகள். இதை வேத பௌதீகமும் கூறுகின்றன. இதில் பொருள் சத்தியாகவும், சத்தி பொருளாகவும் மாறி மாறி மாற்றமடைகின்றன. இத்தோற்றமும் அழிவும் றிக் வேதத்தில் முக்கிய இடம் பெறுகின்றது. பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தின் போது பொருட்களும் அவற்றை அழிக்கும் எதிர்ப் பொருட்களும் தோன்றுகின்றன. இரண்டின் தாக்கங்களின் போது ஒளிக் கதிர்கள் வெளியாகின்றன. இதையே உருத்திரன் ((Rudran) என வேத விஞ்ஞானம் கூறுகின்றது. பிற்காலத்தில் ஏற்பட்ட புராணங்களில். இதையே சிவன் என எழுதப்பட்டுள்ளது. சிவனே அழித்தல் தொழிலைச் செய்பவர். சிவன் தனது செயற்பாடுகளின் போது கருணை வடிவினனாகவும் கோரமானவனாகவும் காட்சி கொடுப்பார். இதுவே கதிர் வீச்சின் குண இயல்புகளும் அவை மென்மையான ஆறுதலையும் தர வல்லன மட்டுமன்றி ஊடுருவித்தாக்கமும் விளைவிப்பன.


பிரபஞ்ச நடனம் புரியும் சிவன்:


படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் ஆகிய ஐந்தொழில்கள் மூலம் சீவராசிகளின் இறப்பு பிறப்பின் சமநிலை பேணப்படுவதை சிவநடனம் தெளிவாகக் காட்டி நிற்கின்றது. தம்மைத்தூய்மைப் படுத்த எண்ணற்ற பிறவிகளை எடுப்பதை சிவநடனம் தத்ரூபமாக விளக்கி நிற்கின்றது. முழுமுதற் கடவுளாகிய சிவன் முழு உலகத்தையுமே தனது சத்தியால் ஆக்கியவன். அவனுடைய நடனம் சத்தியின் இயக்கத்தை காட்டுகின்றது. ஒவ்வொரு பிறவியும் பிறவிச் சக்கரத்திலே சுழன்று கொண்டிருப்பதை சிவ நடனம் காட்டுவதை இந்து மதம் மிக அழகாக உருவகித்து விளக்குகின்றது என ஆனந்தக்குமாரசுவாமி கூறுகின்றார். சிவ நடனம் ஐந்தொழில்களை மட்டுமின்றி உலகின் நிலையாமையையும் எடுத்து விளக்குகின்றது.


விஞ்ஞானமும் பிரபஞ்ச நடனமும்:


பருவகால மாற்றங்களும் உயிர்களின் பிறப்பும் இறப்பும் மட்டுமன்றி சடப்பொருட்களின் மூலக உறுப்புகளுக்கிடையே நடைபெறும் தாக்கங்களும் உலகிலே எல்லாமே மாற்றமடைவன நிலையற்றன என விஞ்ஞானம் கூறுகின்றது.. இவற்றின் இயக்கமே சிவ நடனம். இச்செயற்பாட்டின் போது பொருட்கள் தேவையற்றனவற்றை வெளியேற்றி தேவையானவற்றை சூழலிலிருந்து பெற்றுக்கொள்க்pன்றன. இதனாலேயே பொருட்களின் இயல்புத்தன்மையும் சம நிலையும் பேணப்படுகின்றது. இச்செயற்பாட்டின்போது சத்தி வெவ்வேறு அளவில் பயன்படுத்தப்படுவதோடு குறிப்பிட்ட பொருளின் தன்மையும் பேணப்படுகின்றது.


நவீன பௌதீகவியலாளரும் பொருட்களின் நுண்ணிய துணிக்கைகளின் இயக்க்கமே சிவ நடனம் எனக் கூறுகிறார்கள். தொழில்நுட்பம் மூலம் வெற்றுச்சாடியில் மிக நுண்ணிய கூறுகளின் இயக்கத்தைப் பரீட்சித்துள்ளார்கள். .இதன் முடிபுகளும் சிவநடனத்தின் இந்துமத விளக்கமும் உடன்பாடாக இருப்பதை வியந்து கூறியுள்ளார்ள்.


இந்து மதம் இயற்கை அறிவு:


இந்து மதம் பிரபஞ்சத்தை இரண்டு வகையாக வகைப்படுத்தியுள்ளனர். ஓன்று ஐம்புலன்கள் வழியாக அறிவது மற்றையது உணர்ந்து அறிவது. இக்கருத்து ஒரு குழப்பமாக இருந்தாலும் இயற்கை மனிதனுக்கு மிக உதவி

Who Voted

Leave a comment