1
வாழு… வாழவிட்டு வாழு…

இந்த பரந்த புவியில் பல்வேறு உயிரிணங்கள் வாழ்கின்றன. நம் கண்களால் காண முடியாத அளவு முதல்,   கண்டு வியக்கும் அளவு வரை பல நிலைகளில் பல்வேறு உயிர் வகைகள் நிறைந்ததுதான் இந்த இயற்கையின் பூமி. இவை அனைத்தும் வாழ்கின்றன. நலமாகவும், வளமாகவும், மகிழ்வாகவும் மேலும் ஒருவ்வொரு நொடியையும் நிறைவாகவும் வாழ்கின்றன.


இவற்றுள் பலவற்றிற்கு தங்கள் சக இன உயிரிணத்துடன் தொடர்புகொள்ள கூட தெரியாமல் இருக்கலாம், பலவற்றிற்கு வகைவகையான மொழிகள் தெரியாமல் இருக்கலாம், பலவற்றிற்கு கணிதத்தை அறியாமல் இருக்கலாம் இன்னும் பலவற்றிற்கு அறிவியலும் அறியாமல் இருக்கலாம் ஆனாலும் அவை நிம்மதியாக வாழ்கின்றன.


கணிதம் மற்றும் அறிவியல் அவைகளின் வாழ்வில் இல்லாமலில்லை ஆனால் அவை அதனை அறியவில்லை.


இப்படி எதுவுமே அறிவுபூர்வமாக அறியாமல் இருந்தும் கூட அனைத்து உயிரிணங்களும் வாழ்வை மகிழ்வாக வாழ்கின்றன… மற்ற உயிர்களின் வாழ்க்கைக்கும் உதவுகின்றன… தன்னை அறியாமலே…


nam_uir

ஆனால்….


அறிவையும் அதன் ஊடக அறிந்த தகவல்களுக்காக அறிவியல் என்ற தனித் துறையையும் உருவாக்கி வைத்துக்கொண்டு ( அதில் ஏகப்பட்ட உட்பிரிவுகள் வேறு….! ) ஆறறிவு மனிதன் என்று ஆரவாரம் செய்துகொண்டு நாள்தோரும் அறிவியலை அறிவதிலேயே காலத்தை செலவிடும் இந்த மானுட கூட்டம் மட்டும் வாழ்க்கையை வாழ்வதே இல்லை…. (பரிதாபம்…. அந்தோ.. பரிதாபம்…..!)


இதற்கு விதிவிலக்குகளும் உண்டு,


“தேவை” என்ற வார்த்தையின் அர்த்தமறிந்த அனைத்து எளிய மக்களும் உண்மையில் வாழ்க்கையை மகிழ்வாக வாழ்கின்றனர்.


மற்ற ம(மா)க்கள் அனைவரும் நாளை வாழலாம், அடுத்த நாள் வாழலாம், அடுத்த வாரம் வாழலாம், அடுத்த மாதம் வாழலாம், அடுத்த வருடம் சிறப்பாக வாழலாம்,…


இல்லை இல்லை கல்லூரியில் நன்றாக படித்து அதிக ஊதியத்துடன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையை பெற்ற பிறகு ஊர் மெச்ச வாழலாம்….

இல்லை இல்லை,… அழகான ஒரு பெண் நமக்கு மனைவியாக வந்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சியாக வாழலாம்….

இப்படி…. யே….

அது நடந்தால் வாழலாம்…

இது நடந்தால் வாழலாம்… என்று வேறு எவற்றிலோ தனது வாழ்க்கை உள்ளது என முட்டாள்தனமாக நம்பி, தனது நிகழ்கால வாழ்வை தொலைக்கும்… பரிதாபகரமான மக்களே இப்பொழுது பெரும்பான்மை.


எனவே, நண்பர்களே…


இயற்கையின் அறிவியலே ஆகச்சிறந்தது…!

அதை விட வேறோரு சிறந்த விஞ்ஞானியை இந்த விண்வெளியில் எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க இயலாது…


மனிதனின் அறிவியல் என்பது “சான் ஏறினால் முழம் சறுக்கும்” கதைதான்… இதை நாம் மறுக்கவும் முடியாது… மறக்கவும் கூடாது…


தன்னை சுற்றி நடப்பனவற்றின் காரணமறியாமலே உலக உயிர்கள் அனைத்தும் ஆனந்தமாக வாழ்கின்றன.


ஆனால் நாம் தான்,

பகல் இரவுக்கு பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா…?

பருவநிலைக்கு பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா…?

உடலுக்கு பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா…?

அதற்கு பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா…?

இதற்கு பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா…?

என்று அரைகுறை புரிதலில், நாமும் கெட்டு…

நம்முடைய காலத்தில் வாழ்கின்ற பாவத்திற்காகவே உலக உயிர்களையும் கெடுத்து… அதற்கும் மேலாக இந்த இயற்கையையே நாசம் செய்துகொண்டுள்ளோம்… (இக்கட்டுரையை எழுதும் நான் உட்பட…).


namalvar_2


எனவேதானோ என்னவோ, நமது முன்னோர்கள் விண்ஞானத்தை விட மெய்ஞானத்தையே போற்றினர். ஆகையால், அவர்களும் அனைத்து உயிர்களைப்போல் வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.


இதையேதான், நாம் விரும்பும் ஐன்ஸ்டீனும் கூறி வருந்துவார்,


“நமக்கு தேவதை போன்ற உள்ளுணர்வும், அந்த தேவதைக்கு வேலையாளாக அறிவும் இருந்தது. ஆனால், நாம் அறிவை உயர்த்தி தேவதையாகிய உள்ளுணர்வை சேவகம் செய்ய வைத்துவிட்டோம்” என்று.


இதுபோல் நமது நாயகன் நிகோலா தெஸ்லாவும்,


“உள்ளுணர்வு என்பது நமது அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்று” என்று கூறியுள்ளார்.


இறைக்கு சமநிலை பிடிக்கும். சுழற்சியும் பிடிக்கும். இம்மண்ணில் இயற்கையை புரிந்துகொள்ளாத மானுட இனம் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை எதிர்த்த போது, இயற்கை தனது அடுத்த மகனை “நம்மாழ்வார்” என்ற பெயரில் இம்மண்ணில் ஈன்றது, இம்மண்ணில் இன்னும் பல காலம் உயிர்கள் மன்னுவதற்கே (நிலைபெறுவதற்கே…). இயற்கையை மறந்து தவிக்கவிருந்த சமூகத்திற்கு, இயற்கையை மறக்கலாமா…! என்று அதன் பிரமாண்டத்தை பொருமையாக எடுத்துக்கூறி காத்த நமது தாத்தா நம்மாழ்வார் பிறந்து இன்று இரண்டாவது நாள்… (06-04-1938).


namalvar


எனவே, நண்பர்களே நாமனைவரும் மாக்களாக திரியாமல் இயற்கையை சீரழிக்காமல், மக்களாக இன்பமாக தேவையறிந்து… உண்மையிலேயே…..வாழ்கையை வாழ்வோமாக……..!


(என்னடா, அறிவியல் தளத்தில் அறிவியலல்லாததை பதிவிடுகிறான் என்று யாரும் எண்ணவேண்டாம். எனெனில், இதுவே மெய்யறிவியல்…)


நன்றி


Who Voted

Leave a comment