1
எதிர்துகள் என்னும் கண்டுபிடிப்பின் மையில் கற்கள் : பகுதி – 5

தமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம்…


“எதிர்துகளின் மையில் கற்கள்”  – இது ஒரு தொடர் பதிவு ஆகும். இதன் முந்தைய  பகுதிகளை  பார்க்கவில்லை எனில் பார்த்து விடுங்கள்…


மையில் கல் : 13 – “04-04-1981


முதல் புரோட்டான் மற்றும் எதிர்புரோட்டான் மோதல்


(04-04-1981)


Simon van der Meer and Carlo Rubbia
Simon van der Meer and Carlo Rubbia

ஏப்ரல் 4, 1981 அன்று குறுக்கீட்டு சேமிப்பு வளையங்களில் (Intersecting Storage Rings – ISR)” உலகில் முதல் முறையாக புரோட்டான் மற்றும் எதிர்புரோட்டான் மோதல் CERN – ல் நிகழ்ந்தது. இச்சோதனையில் தலைமை வகித்த சைமன் வான் டெர் மீர் (Simon Van Der Meer) மற்றும் கார்லோ ருப்யா (Carlo Rubbia)” ஆகிய இருவருக்கும் 1984 – ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.


ISR
Intersecting Storage Rings with Proton Synchrotron

ISR தனது 13 வருட (1971 முதல் 1984 வரை) பணியில் துகள் இயற்பியலில் (In particle physics)” சிறப்பாக பங்களித்தது. இக்காலகட்டத்தில், இது புரோட்டான்களினுள் சில பொருட்கள் உண்டென்று ஊகித்து, அவற்றை கண்டும்பிடித்தது. அவைதான், குவார்க்கு (Quark) மற்றும் ஒட்டுமின்னி (Gluons).


மையில் கல் : 14 – “15-09-1995


முதல் எதிரணு (எதிர் ஹைட்ரஜன்) CERN – ல் உருவாக்கப்பட்டது


(15-09-1995)


 


antihydrogen
எதிர் ஹைட்ரஜனை (antihydrogen)

CERN – ன் குறையாற்றல் எதிர்புரோட்டான் வளையம் (Low Energy Antiproton Ring – LEAR)” என்ற கருவியின் மூலம் Walter Oelert (வால்டர் ஓலெர்ட்) தலைமையிலான குழு உலகின் முதலாவது எதிர் ஹைட்ரஜனை உருவாக்கினர்.


இந்நிகழ்வில் ஓர் ஒன்பது எதிர் ஹைட்ரஜன் அணுக்கள் உருவாகின. இவை, எதிர்புரோட்டான் மற்றும் செனான்(Xenon) அணுக்களை 3 வார காலம் மோதவிட்டதின் பலனாக உருவானது.


இந்த ஒவ்வொரு எதிர் ஹைட்ரஜனும் ஒரு நொடியில் 40 பில்லியனில் ஒரு பங்கு நேரம் உயிர்த்திருந்தது. பின்னர், அருகில் உள்ள சக பருப்பொருள் துகள்களுடன் சேர்ந்து நிர்மூலமாகியது ( Annihilation ).


இந்த நிர்மூலமாகும் நிகழ்வுகளை கண்காணிப்பதன் மூலம் எதிரணு உருவாகியுள்ளதை அறியலாம். இந்த ஒவ்வொரு எதிர் ஹைட்ரஜன் அணுவும் நிர்மூலமாவதற்கு முன் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் 10 மீட்டர்களை கடக்கின்றன.


ஹைட்ரஜன் மிகவும் எளிமையான தனிமமாகும். இதை புரிந்துகொள்வது சற்று சுலபம். எனவே, எதிர் ஹைட்ரஜனை கண்காணிப்பதன் மூலம் இப்பிரபஞ்சத்தில் பருப்பொருளுக்கும் எதிர் பருப்பொருளுக்குமான சீரின்மைக்கான காரணத்தை அறியலாம்.
மையில் கல் : 15 – “07-02-1997


எதிர் புரோட்டான் ஒடுக்கி (Decelerator)  ஏற்கப்பட்டது


(07-02-1997)


Antiproton Decelerator
Antiproton Decelerator thanks to CERN – https://home.cern/about/accelerators/antiproton-decelerator

1996ஆம் ஆண்டு CERN – ன்,   • The Antiproton Accumulator (AC),

  • The Antiproton Collector மற்றும்

  • The Low Energy Antiproton Ring (LEAR) போன்ற கருவிகள் LHC (Large Hadron Collider)


ன் வருகையால் கைவிட முடிவெடுக்கப்பட்டது.


ஆனால், ஒரு தரப்பு அராய்ச்சியாளர்கள் குழு LEARஐ குறையாற்றல் கொண்ட எதிர்புரோட்டான்களுடன் பயன்படுத்த விருப்பம் தெரிவித்தனர். எனவே, தலைமை மன்றமானது குறைந்த செலவில் தேவையான குறையாற்றல் கதிர்களை உற்பத்தி செய்யும் வழியை கண்டறியும் படி Proton Synchrotron பிரிவிடம் கேட்டுக்கொண்டது. இதன் விளைவாக Antiproton Decelerator (AD) வடிவமைக்கப்பட்டு மன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.


இந்த Antiproton Decelerator கீழ்காணும் செயல்களை செய்யும்,


இது ஒரு நிமிடத்தில் 107 புரோட்டான்கள் உடைய கற்றையை வழங்கும் திறனுடையது. இக்கற்றையை தேவையான ஆய்வுகளில் பயன்படுத்திக்கொள்ளலாம்.


மேலும், 200 நாநோ நொடிகள் (200 nano seconds) செறிவான நீளமுடைய குறையாற்றல் (அதாவது 100 MeV/c) கற்றைகளை வழங்கவல்லது.


கடைசியாக Antiproton Decelerator ஆனது பிப்ரவரி 07, 1997 அன்று ஏற்கப்பட்டது.
இன்றைய பதிவில் நாம் புரோட்டான் மற்றும் எதிர்புரோட்டான் மோதல், முதல் எதிர் ஹைட்ரஜன் உருவாக்கம் மற்றும் எதிர் புரோட்டான் ஒடுக்கி (Decelerator) என்ற விடயங்களை அறிந்தோம். நமது அடுத்த பதிவில் ATHENA மற்றும் ATRAP, ALPHA traps மற்றும் ASACUSA experiment ஆகியவை குறித்து காண உள்ளோம். அதுமட்டுமல்லாது, நமது அடுத்த பதிவானது இந்த தொடரின் கடைசி பதிவுமாகும்…!இதன்  முந்தைய பதிவுகளுக்கான தொடர்பு


இந்த தொடரின் ஆங்கில வடிவத்தை cern – ன் வலைதளத்தில் காணலாம் :


http://timeline.web.cern.ch/timelines/the-story-of-antimatter/overlay


தங்களின் கருத்துக்களை ஆவளுடன் எதிர்நோக்குகிறோம்…   தங்கள் கருத்துக்களை பதிந்துவிடுங்கள்…


நன்றி


 


உசாத்துணை:


=> CERN – story of antimatter


 http://timeline.web.cern.ch/timelines/the-story-of-antimatter/overlay


https://www.chronozoom.com/czmin/cern/


படங்கள்:


=> https://search.creativecommons.org/


=> https://home.cern/about/accelerators/antiproton-decelerator


=> https://commons.wikimedia.org/wiki/Category:Images


=> https://pixabay.com/

Who Voted

Leave a comment