1
பிளாக்செயின் தொழில்நுட்ப வழிகாட்டி-4-பிளாக்செயின் மேம்படுத்துநர் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய முக்கிய கருவிகள்

ஒவ்வொரு மையப்படுத்தப்படாத செயல்முறைகளும், செயல்பாடுகளும் அமைப்புகளும் எதிர்காலத்தில் முழுமையாக தன்னாட்சி பெறவேண்டும் என்பதே இந்த பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படை நோக்கமாகும். இது மாறாதது, மறைகுறியாக்கப்பட்டது, மையப்படுத்தப்படாதது . இதில் இடைத்தரகர்களின் அல்லது அரசாங்களின் தலையீடு அறவே கிடையாது இதன் அனைத்து பயன்பாடுகளிலும் எந்த வொரு மூன்றாம் தரப்பினரின் தலையீட்டையும் அறவே அகற்றிவிடுகின்றது . தற்போது ஏராளமான அளவிலான நிறுவனங்கள், குறிப்பாக தொடக்க நிறுவனங்கள், தங்களுடைய நிபுணத்துவத்தைத் இந்த தொழில்நுட்பத்தில் தேடுவதால், பிளாக்செயின் மேம்படுத்துநர்கள் இப்போது தொழில்துறையில் உண்மையான யூனிகார்ன்களாக கருதப்படுவதில் ஆச்சரியமில்லை. இருப்பினும், அவர்களில் ஒரு சிலரே இன்று இந்த தொழில்நுட்பத்தில் பணிபுரிகின்றார்கள்.

இந்த பிளாக்செயின் தொழில்நுட்பத்துடன் பணிபுரிவதற்காக வென நாம் புதிதாக வொரு பிளாக்செயினை உருவாக்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக ஏற்கனவே நடைமுறை பயன்பாட்டில் இருக்கும் பிட்காயின், எத்தேரியம் , ஹைப்பர் லெட்ஜர் போன்ற வலைபின்னல்களையே நாம் பயன்படுத்தி நம்முடைய பிளாக்செயினை துவங்கலாம். பிட்காயின் ,எத்தேரியம் ஆகிய இரண்டுமே மையப்படுத்தப்படாதவை, கட்டற்றவை எந்தவொரு தனியாருக்கும் சொந்தமானவை யல்ல. ஹைப்பர் லெட்ஜர் மட்டும் தனியாருக்கு சொந்தமானது ஆனால் கட்டற்றதாகும் நம்முடைய பயன்பாட்டின் அடிப்படையில் இவைகளுள் ஒன்றினை நாம் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அதாவதுDApps எனும் மையபடுத்தப்படாத பயன்பாடுகளை உருவாக்குவதற்கு எத்தேரியம் பொருத்தமானது, அதே சமயம் இவ்வாறானDApps எனும் பயன்பாட்டிற்கு பிட்காயின் ஆனது ஒரு நல்ல தேர்வாக அமையாது , ஏனெனில் இது P2P பரிமாற்ற நடவடிக்கைளுக்காக மட்டுமே வடிவமைக்கப் பட்டுள்ளது

இந்த புதிய பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பணிபுரிவதற்காக மேம்படுத்துநர்கள் ஒரு சில சிறப்பு கருவிகளைக் கொண்டு தங்களைத் தாங்களே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பிட்காயின் அல்லது எத்தேரியம் வலைபின்னல்களில் பணிபுரியவிரும்பும் மேம்படுத்துநர்களுக்கு அவ்வாறான சிறப்பு கருவிகள் மிகபயனுள்ளவைகளாக இருக்கும் அவ்வாறான கருவிகளில் ஒருசிலவற்றை பற்றி இப்போது காண்போம்.

1.பிளாக்செயினை ஒரு சேவையாககருதுதல் (Blockchain as a Service (BaaS)): பிளாக்செயின் தீர்வுகளுக்குத் தேவையான திறன்களை பின்புலத்தில் வழங்குவதே இந்த பிளாக்செயின் ஒரு சேவையாக கருதுதல்என்பதன் முக்கிய நோக்கமாகும். பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் இந்த பாஸ் (BaaS) சேவைகளானவை மல்டிசெயின், எரிஸ், ஸ்டோர்ஜ் ,ஆகூர் உள்ளிட்ட பல சங்கிலி தொழில் நுட்பங்களை ஆதரிக்கின்றன. பயனர்கள் தங்களுடைய பிளாக்செயின் அமைப்பை மேலும் பாதுகாப்பாக மாற்றியமைத்து கொள்வதற்காக இந்த BaaS எனும் சேவை வழங்குநர்களால் ஏற்கனவே கற்றுக்கொள்ளப்பட்ட அனுபவங்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் என்பதே இந்த BaaS இன் முக்கியமானதொரு பயனாகும் . மைக்ரோசாப்ட், ஐபிஎம், ஹெச்பி ,ஆரக்கிள் ஆகியவை இந்த BaaSஎனும் சேவையை தற்போது வழங்குகின்ற மிக முக்கிய முன்னனி நிறுவனங்களாகும்.

2.திறனுடைய ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கான தளங்கள் இவ்வாறான ஒப்பந்தங்களை உருவாக்குவதற்காக சாலிடிட்டி (Solidity) எனும் நிரலாக்கமொழியை முதன்மையாக பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது, இது செயல்படுவதற்காக சோல்க்( Solc) என்பதை தொகுப்பானாக பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது . பொதுவாக எத்தேரியம் முனைமங்களில் பெரும்பாலானவை இந்த சோல்க் செயலாக்கத்தை உள்ளடக்கியவைகளாகும், ஆனால் பிந்தைய சோல்க்( Solc) ஆனது இணைய இணைப்பில்லாத தொகுப்பிற்கான தனி தொகுதியாக(module) கிடைக்கிறது.

திறனுடைய ஒப்பந்தங்களை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படும் மற்றொரு நிரலாக்க மொழி செர்ப்பென்ட் (Serpent) ஆகும் , இதற்காக ஸ்கிரிப்ட் அல்லது குறியீட்டை எழுத ஈதர் ஸ்கிரிப்டர் நமக்கு உதவுகின்றது. செர்ப்பென்ட் தொகுப்பின் சமீபத்திய பதிப்பு கிட்ஹப்பில்(github) கிடைக்கின்றது.

3.டெஸ்ட்நெட் (Testnet )என்பது மற்றொரு மாற்று பிளாக்செயின்கருவியாகும், இதன் நாணயங்கள் எந்தவொரு மதிப்பையும் பெறவில்லை ஆயினும் இவற்றை எளிதாக பெறமுடியும். இந்த பயன்பாட்டின் மேம்படுத்துநர்கள் தங்களுடைய பிளாக்செயின்களை உருவாக்குவதற்கு முன் அவற்றைபரிசோதிக்க இவை அனுமதிக்கின்றன. டெஸ்ட்நெட் மேம்படுத்துநர்கள் உண்மையான கிரிப்டோகரன்ஸியைப் பயன்படுத்தாமல் அல்லது முதன்மையான சங்கிலியானது இடைமுறிப்பதைப் பற்றி கவலைப்படாமல் பரிசோதனை செய்வதற்காக சாண்ட்பாக்ஸ் சூழலை வழங்குகின்றது. எத்தேரியம் , பிட்காயின்ஆகிய இரண்டும் பிளாக்செயின் டெஸ்ட்நெட்டிற்கு வெவ்வேறு அளவுகோல்களைக் கொண்டுள்ளன.

பிட்காயின் டெஸ்ட்நெட்டில் பணிபுரிவதற்காக, நாம் மிகவித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட டெஸ்ட்நெட் பிட்காயின் முகவரியை உருவாக்க வேண்டும், அது எப்போதும் ‘m’ அல்லது ‘n’. ஆகிய எழுத்துகளுடன் துவங்கிடுமாறு அமைந்திருக்கும்.எத்தேரியத்தைப் பொறுத்தவரை, ஒரே முகவரியைகொண்ட டெஸ்ட்நெட் , main net ஆகிய இரண்டிலும் செயல்படுத்திகொள்ள முடியும்; எனவே, அவற்றை ஒன்றாக கலந்துவிடாமல் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.

டெஸ்ட்நெட் நாணயங்களை இரண்டு பொதுவான வழிகளில், எளிதாக பெறமுடியும். முதலாவதாக மறையாக்க வரைகலை (cryptographic) புதிர்களைத் தீர்வுசெய்வதன் வாயிலாக பெறலாம் இந்த டெஸ்ட்நெட் சங்கிலிகளில் குறைவான miners உம் சிரமத்தின் அளவுமிக குறைவாகவும் உள்ளதால் போட்டிக்கான ஒரு தொகுப்பு பரிசினை பெற hashபுதிருக்கு தீர்வு காண்பதை எளிதாக்குகிறது. இந்த டெஸ்ட்நெட் நாணயங்களைப் பெறுவதற்கான மற்றொரு வழி faucetsஐ பயன்படுத்துவதாகும். இந்த வலைத்தளங்களுக்கான ஒருசில பணிகளை முடிப்பதற்கு ஈடாக ஒரு சிறிய அளவு டெஸ்ட்நெட் நாணயங்களை இவை வழங்குகின்றன.

4.மிஸ்ட் (Mist)என்பது பிளாக்செயின்படுத்துவதற்கான மற்றொரு சிறந்தகருவியாகும் இது தொடர்பாக எத்தேரியத்தில் Mist-Ethereum wallet ,Ethereum wallet ஆகிய இரண்டு சொற்கள் பயன்பாட்டில் இருப்பதால் பெரும்பாலான மக்கள் பெரிதும் குழப்பமடைகின்றார்கள். அதாவது மிஸ்ட்-எத்தேரியம் பணப்பை (Mist-Ethereum wallet) என்பது பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப் படுகின்றது. அதனோடு இதிலுள்ள Mist என்ற பெயர் இணைய உலாவிக்கும் பயன்படுத்தப்படுகின்றது. நம்முடைய எத்தேரியத்தை சேமித்து அனுப்புவதற்காக மிஸ்ட்-எத்தேரியம் பணப்பையை அனுமதிக்கின்றது. இது இணையத்தில் நேரடியாக பயன்பாட்டில் இருக்கும் Ethereum Wallet இலிருந்து வேறுபட்டது. அதேசமயம் நம்முடைய கணினியிலிருந்து Mist ஆனது இயங்குகின்றது மேலும் அவ்வாறு பயன்படுத்திகொள்வதற்காக இதனை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

மிஸ்ட் இணையஉலாவி என்பது ஒரு சிறப்பு நோக்கம் கொண்டஇணைய உலாவியாகும், இது எத்தேரியம் பிளாக்செயினின் ஒட்டுமொத்த பார்வையையும், ether , DAO , ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் போன்ற பிளாக்செயின் கூறுகளில் தொடர்பு கொள்ள தேவையான அனைத்து கருவிகளையும் வழங்குகின்றது. இருப்பினும், இது இன்னும் பீட்டா நிலையிலேயே உள்ளது.. மூன்றாம் தலைமுறை வலையை (3.0) உருவாக்க மிஸ்ட் உலாவி அறிமுகப்படுத்தப்பட்டது, இது மையப்படுத்தப்%

Leave a comment